யுங் குற்றுகரமேயாம். சிறுபான்மை ஏனை யுயிர்களையுங் கொள்க. |
உதாரணம் : எஃகு கஃசு 1கஃடு கஃது கஃபு கஃறு அஃது இஃது உஃது என வரும். கஃறீது முஃடீது என்பனவற்றை மெய்பிறிதாகிய புணர்ச்சி என்றதனாலும் ஈண்டுப் புள்ளியென்றதனாலும் ஆய்தமும் மெய்யாயிற்று. அஃகாமை வெஃகாமை அஃகி வெஃகி அஃகம் எனப் பிறவுயிர்களோடும் வந்தது. கஃசியாதெனத் திரிந்ததுவுங் குற்றியலுகரத்தோடு புணர்ந்ததாம். |
(5) |
39. | ஈறியன் மருங்கினு மிசைமை தோன்றும். |
|
இஃது அவ்வாய்தம் புணர்மொழியகத்தும் வருமாறு கூறுகின்றது. |
இதன் பொருள் : ஈறியன் மருங்கினும் - நிலைமொழியீறு வருமொழி முதலொடு புணர்ந்து நடக்கும் இடத்தும், இசைமை தோன்றும் - தன் அரைமாத்திரையே இசைக்குந் தன்மை தோன்றும் என்றவாறு. |
உதாரணம் : கஃறீது முஃடீது எனவரும். இவ்வீறு இயலுமாறு புள்ளிமயங்கியலுட் பெறுதும். ஈண்டும் இடம் குற்றெழுத்துமேல் வரும் வல்லெழுத்து. |
(6) |
|
ரம் வல்லாறூர்ந்து வருமென்று கூறியதுபோல ஈண்டும் வல்லாறன் மிசைத்தென்று கூறியதனானும், ஈண்டுப் புள்ளி (வல்லாறன்மிசைத்து வரும்புள்ளி) யென்று ஆய்தத்தொடரைக்கருதுமாறு கூறியதனானும், உகரமூர்ந்த வல்லாறன் மிசைவரும் ஆய்தத்தையே ஆய்தத் தொடர் மொழியென மேற்கூறுதலானும், உயிர் என்றது பெரும்பான்மையும் குற்றுகரத்தையே யுணர்த்து மென்றபடி. ஈண்டென்பது 'வல்லாறன் மிசைத்து' என வந்த முன்வாக்கியத்தைச் சுட்டி நின்றது. இனி, ஈண்டுப் புள்ளி என்றதனானும் என்பதற்கு இச் சூத்திரத்துள் ஆய்தத்தைப் புள்ளியென்று, மெய்யுளடக்கினமையானே குற்றிலுகரத்தை உயிருளடக்கி உயிரென்று கூறினாரென்று கருத்துக் கோடலுமாம். கஃசியாது என்புழி கஃசு என்னும் குற்றியலுகரவீறே அங்ஙனம் புணர்ந்ததாகலின் அதுவும் குற்றுகரமேயாம். அதனை 'யகரம் வரும்வழி யிகரங் குறுகு - முகரக் கிளவி துவரத் தோன்றாது' [குற்-புண-சூ-5] என்னும் சூத்திரம் நோக்கியறிக. |
1. கஃடு, கஃது, கஃபு என்பன அக்காலத்து வழங்கி இறந்தனபோலும். |