40. | உருவினு மிசையினு மருகித் தோன்று மொழிக்குறிப் பெல்லா மெழுத்தி னியலா வாய்த மஃகாக் காலை யான. |
|
இஃது எதிரது போற்றலென்னும் உத்தியாற் செய்யுளியலைநோக்கி ஆய்தத்திற்கு எய்தியதோர் இலக்கணம் உணர்த்துகின்றது. |
இதன் பொருள் : 1உருவினும் இசையினும் அருகித் தோன்றுங் குறிப்புமொழியும் - நிறத்தின்கண்ணும் ஓசையின்கண்ணுஞ் சிறுபான்மை ஆய்தந்தோன்றும் பொருள் குறித்தலையுடைய சொல்லும், எல்லாமொழியும் - அவையொழிந்த எல்லா மொழிகளும், எழுத்தினியலா - ஒற்றெழுத்துக்கள்போல அரைமாத்திரையின் மிக்கு நடந்து, ஆய்தம் அஃகாக் காலையான - ஆய்தஞ் சுருங்காத இடத்தான சொற்களாம் என்றவாறு. |
எனவே, ஈண்டு ஆராய்ச்சியின்றேனுஞ் செய்யுளியலிற் கூறும் 'ஒற்றள பெடுப்பினு மற்றெனமொழிப' (செய்யுளில் - 18) என்னுஞ் சூத்திரத்துக் 'கண்ண்டண்ணெனக் கண்டுங்கேட்டும்' என்புழிக் கண்ண்ணென்பது சீர்நிலை யெய்தினாற்போலக்' 'கஃஃறென்னுங் கல்லதரத்தம்' என நிறத்தின்கண்ணும் 'சுஃஃறென்னுந் தண்டோட்டுப் பெண்ணை' என இசையின்கண்ணும் வந்த ஆய்தம் ஒருமாத்திரை பெற்றுச் சீர்நிலை யெய்துங்கால், ஆண்டுப் பெறுகின்ற ஒரு மாத்திரைக்கு ஈண்டு எதிரதுபோற்றி விதி கூறினார், ஆய்தம் |
|
1. 'உருவினு மிசையினு மருகித் தோன்றும் மொழிக்குறிப்பெல்லாம்' என்பதற்குக் குறிப்பு மொழியெல்லாம் என்று பொருள் கூறலன்றி, உம்மைத்தொகையாகக் கோடல் சிறப்பின்றாம். உரையாசிரியர் அவ்வாறே கொள்வர். இனி எழுத்தினியலா என்பதற்கு ஆய்தவெழுத்தானிட்டு எழுதப்பட்டு நடவா என இளம்பூரணர் கூறுவது வழக்கோ என்பது ஆராயத்தக்கது. எழுத்தினியலா என்பதற்குத் தனியெழுத்தான் நடவா என்று பொருள்கூறி, இரண்டெழுத்தானடக்குமென்று பொருள் கூறுதலும் பொருத்தம் போலும். எழுத்தெனவே தனியெழுத்தென்பது பெறுதும். ஆய்தம் இரண்டிட்டெழுதப்படா என்று பொருள் கூறில் என்றது, இளம்பூரணர் கருத்தை நோக்கிநின்றது போலும். |