அதிகாரப்பட்டமை கண்டு, 'எஃஃகிலங்கிய கையரா யின்னுயிர் - வெஃஃகு வார்க்கில்லை வீடு' என்று ஏனையிடத்தும் வந்தன. ஒற்றளபெடுக்குமாறு இவ் வதிகாரத்துக் கூறிற்றிலர், அஃது உயிரளபெடைபோலச் சீர்நிலை யெய்துதலும் அசைநிலையாந்தன்மையு முடையவாய்ச் செய்யுட்கே வருதலின். இதனானே ஒற்றளபெடையும் ஒரு மாத்திரை பெறுமென்பது பெற்றாம். |
எழுத்தினென்றே இன் உவமப்பொருள். இயலாவென்றது செய்யாவென்னும் வினையெச்சம். |
இவ்வாறன்றி இக் குறிப்புச் சொற்கள் ஆய்தம் இரண்டிட்டு எழுதப்படாவென்று பொருள் கூறிற் செய்யுளியலோடு மாறுபட்டு மாறுகொளக் கூறலென்னுங் குற்றந் தங்குமென்று உணர்க. |
(7) |
41. | குன்றிசை மொழிவயி னின்றிசை நிறைக்கு நெட்டெழுத் திம்ப ரொத்தகுற்றெழுத்தே. |
|
இஃது எதிரது போற்றலென்னும் உத்திபற்றிச் செய்யுளியலைநோக்கி 'நீட்டம் வேண்டின்' (எழு - 6) என முற்கூறிய அளபெடையாமாறு கூறுகின்றது. |
இதன் பொருள் : குன்றிசை மொழிவயின் நின்று இசை நிறைக்கும் - அளபெடுத்துக் கூறாக்காற் குன்றுவதான ஓசையையுடைய அவ் வளபெடைச் சொற்கண்ணே நின்று அவ்வோசையை நிறைக்கும், அவை யாவை யெனின் ? நெட்டெழுத்திம்பர் ஒத்த குற்றெழுத்தே - நெட்டெழுத்துக்களின் பின்னாகத் தமக்கு இனமொத்த குற்றெழுத்துக்கள் என்றவாறு. |
உதாரணம் : ஆஅ ஈஇ ஊஉ ஏஎ ஓஒ எனவரும் குன்றிசை மொழி என்றதற்கு இசைகுன்றுமொழி என்றுமாம். இன மொத்தலாவது பிறப்பும் புணர்ச்சியும் ஓசையும் வடிவும் ஒத்தல். ஈண்டு மொழியென்றது 'அளபெடையசைநிலை' (செய்யுளியல் - 17) என்னுஞ் செய்யுளிற் சூத்திரத்து எட்டு இயற்சீரின் பாற்படுகின்ற எண்வகை அளபெடைச் சொற்களையும், அவை ஆஅ கடாஅ ஆஅழி படாஅகை ஆஅங்கு ஆஅவது |