மொழியாமென்று கூறி, மீட்டும் அதனையே இச் சூத்திரத்தான் ஓரெழுத்தொருமொழி யென்றெடுத்து அதனோடே ஈரெழுத்தையும் இரண்டிறந்ததனையுங் கூட்டி மொழியாகக் கோடலின், ஒற்றினைக் கூட்டி எழுத்தாகக் கோடல் ஆசிரியர்க்குக் கருத்தன்மை யுணர்க. அன்றியும் 'மொழிப்படுத் திசைப்பினும்' (எழு - 53) என்னுஞ் சூத்திரத்திற் கூறுகின்றவாற்றானும் உணர்க. 'அகரமுதல் னகர விறுவாய் முப்பஃதென்ப' (எழு - 1) என ஒற்றினையும் எழுத்தென்றது எழுத்தின்தன்மை கூறிற்று. ஈண்டு மொழியாந்தன்மை கூறிற்று. |
(12) |
46. | மெய்யி னியக்க மகரமொடு சிவணும். |
|
இது தனிமெய்களை அகரம் இயக்குமாறு கூறுகின்றது. |
இதன் பொருள்: மெய்யினியக்கம் - தனிமெய்களினது நடப்பு, அகரமொடு சிவணும் - அகரத்தோடு பொருந்தி நடக்கும் என்றவாறு. |
எனவே ஒருவன் தனிமெய்களை நாவாற் கருத்துப்பொருளாகிய உருவாக இயக்கும் இயக்கமும், கையாற் காட்சிப் பொருளாகியவடிவாக இயக்கும் இயக்கமும், அகரத்தோடு பொருந்தி நடக்கும் என்றவாறு. |
உதாரணம்: 'வல்லெழுத் தென்ப க ச ட த ப ற' (எழு - 19) 'ககார ஙகார முதனா வண்ணம்' (எழு - 9) என்றாற்போல்வன நாவால் இயக்கியவாறு காண்க. எழுதிக் காட்டுமிடத்துக் ககரம் முதலியன உயிர்பெற்று நின்ற வடிவாக எழுதிப் பின்னர்த் தனிமெய்யாக்குதற்குப் புள்ளியிட்டுக் காட்டுகின்றவாற்றான், வடிவை இயக்குமிடத்தும் அகரம் கலந்து நின்றவாறு காண்க. |
இங்ஙனம் மெய்க்கண் அகரங் கலந்துநிற்குமாறு கூறினாற்போலப் பதினோருயிர்க்கண்ணும் அகரங் கலந்து நிற்குமென்பது ஆசிரியர் கூறாராயினார், அந்நிலைமை தமக்கே புலப்படுத்தலானும் பிறர்க்கு இவ்வாறு உணர்த்துதல் அரிதாகலானுமென்று உணர்க. இறைவன் இயங்குதிணைக்கண்ணும் நிலைத்திணைக்கண்ணும் பிறவற்றின்கண்ணும் அவற்றின் |