மொழிமரபு79

இதன் பொருள்: எல்லா  எழுத்தும் - பன்னீருயிரும், மெய்ந்நிலை தம்
இயல்  மயக்கங்  கிளப்பின் - மெய்யின் தன்மையிலே தம்முடைய தன்மை
மயங்கிற்றாகப் பெயர் கூறின், 1மானமில்லை - குற்றமில்லை என்றவாறு.
 

மெய்யின்  தன்மையாவது  வன்மை மென்மை இடைமை. தம்மியலாவது
உயிர்த்தன்மை  என்றது.  வல்லெழுத்து  மெல்லெழுத்து இடையெழுத்தென
உயிர்மெய்க்கும்   பெயரிட்டாளுதல்  கூறிற்று. அவை 'வல்லெழுத் தியையி
னவ்வெழுத்து   மிகுமே'  (எழு - 296)  எனவும்,  'மெல்லெழுத்  தியையி
னிறுதியொ டுறழும்' (எழு - 342) எனவும், 'இடையெழுத்தென்ப ய ர ல வ
ழ ள' (எழு - 21) எனவும் பிறாண்டும் ஆள்ப. எழுத்தை வன்மை மென்மை
இடைமையென விசேடித்த சிறப்பான் இப்பெயர் கூறினார்.
 

இஃதன்றிப்  பதினெட்டுமெய்யின்  தன்மை கூறுமிடத்து மெய்ம்மயக்கங்
கூறிய  வகையானன்றி  வேண்டியவாறு  மயங்கு  மென்று கூறி, 'அவற்றுள்
லளஃகான்   முன்னர்'   (எழு - 24)   என்பதனைக்   காட்டில்   அஃது
இருமொழிக்கண்ணதென மறுக்க.
 

(14)
 

48.

ய ர ழ வென்னு மூன்று மொற்றக்
க ச த ப ங ஞ ந ம வீரொற் றாகும். 
 

இஃது ஈரொற்றுடனிலையாமாறு கூறுகின்றது.
 

இதன் பொருள்: ய ர ழ என்னும்  மூன்றும்  ஒற்ற - ய ர ழ வென்று
கூறப்படும்   மூன்று   புள்ளியும்  ஒன்றாய்  நிற்ப,  க ச த ப ங ஞ ந ம
ஈரொற்றாகும்   -   க  ச  த   பக்களும்  ங  ஞ  ந  மக்களும்  வந்து
ஈரொற்றாய்நிற்கும் என்றவாறு.
 

உதாரணம்: வேய்க்க  வாய்ச்சி  பாய்த்தல்  வாய்ப்பு  எனவும் பீர்க்கு
நேர்ச்சி வார்த்தல் ஆர்ப்பு எனவும், வாழ்க்கை தாழ்ச்சி தாழ்த்தல் தாழ்ப்பு
எனவும், காய்ங்கனி தேய்ஞ்சது காய்ந்தனம் காய்ம்புறம் எனவும், நேர்ங்கல்
நேர்ஞ்சிலை 


1. ஆனம்  என்று  பிரிப்பது நலம், ஆனம் - குற்றம். ஹாநம் என்னும்
வடசொற்றிரிபு.