நேர்ந்திலை நேர்ம்புறம் எனவும் வரும். ழகாரத்திற்கு வாழ்ந்தனம் என இக்காலத்து நகரவொற்று வரும். ஏனைய மூன்றும் இக்காலத்து வழங்குமெனின் உணர்க. |
இனித் தாழ்ங்குலை தாழ்ஞ்சினை தாழ்ந்திரள் வீழ்ம் படை என அக்காலத்து வழங்குமென்று இத்தொகைச் சொற்கள் காட்டலும் ஒன்று. உரையாசிரியரும் இருமொழிக்கட் காட்டியவற்றிற்கு அவ்வீறுகடோறும் கூறுகின்ற சூத்திரங்கள் பின்னர் வேண்டாமை உணர்க. இஃது ஈரொற்றுடனிலை யாதலின் ஈண்டு வைத்தார். |
இனி நெடிற்கீழேயன்றிப் பலவெழுத்துந் தொடர்ந்து நின்றதன் பின்னும் ஈரொற்று வருதல் கொள்க. அவை வேந்தர்க்கு அன்னாய்க்கு என்றாற்போல்வனவாம். |
(15) |
49. | அவற்றுள், ராகர ழகாரங் குற்றொற் றாகா. |
|
இஃது எய்தியது ஒரு மருங்கு மறுத்தல் கூறுகின்றது. |
இதன் பொருள்: அவற்றுள் - முற்கூறிய மூன்றனுள், ரகார ழகாரம் - ரகாரமும் ழகாரமும், குற்றொற்றாகா - குறிற்கீழ் ஒற்றாகா, நெடிற்கீழ் ஒற்றாம், குறிற்கீழ் உயிர் மெய்யாம் என்றவாறு. |
கீழென்னும் உருபு தொகுத்துக் கூறினார். ஆகாதனவற்றிற்கு உதாரணமின்று. |
உதாரணம்: கார் வீழ் என நெடிற்கீழ் ஒற்றாய் வந்தன. கரு மழு எனக் குறிற்கீழ் உயிர்மெய்யாய் வந்தன. இவற்றை விலக்கவே, யகரம் பொய் எனவும் நோய் எனவும் இரண்டிடத்தும் ஒற்றாய் வருதல் பெற்றாம். புகர் புகழ் புலவர் என்றாற் போல்வனவோவெனின், 1மொழிக்கு முதலாம் எழுத்தினைச் சொல்வனவற்றிற்கே ஈண்டு ஆராய்ச்சியாதலால் இவை |
|
1. மொழிக்கு முதலா மெழுத்தைச் சொல்வனவற்றிற்கே யென்றது, மொழிக்கு முதலில் நிற்கும் எழுத்துக் குறிலாயின் அதன் கீழ் வருவனவற்றிற்கே ஈண்டு ஆராய்ச்சியென்றபடி. எனவே புகர் புகழ் என்பனவற்றில் இரண்டெழுத்துக்குப் பின் வருதலின் ஆண்டாராய்ச்சி இல்லையென்பது கருத்து. |