84மொழிமரபு

52.

னகாரை முன்னர் மகாரங் குறுகும்
 

இஃது  அரையளபு  குறுகுமென்ற   மகாரத்திற்குக்   குறுகும்   இடம்
இதுவென்கின்றது.
 

இதன் பொருள் : னகாரை  முன்னர்  மகாரங்  குறுகும்  - முற்கூறிய
னகரத்தின்  முன்னர்  வந்த  மகரந் தன் அரைமாத்திரையிற் குறுகிநிற்கும்
என்றவாறு.
 

உதாரணம் : போன்ம்   என  முன்னர்க்  காட்டினாம்.  னகாரையென
இடைச்சொல் ஈறுதிரிந்து நின்றது.
 

இனித்   தன்னினமுடித்தலென்பதனான்   ணகாரவொற்றின்   முன்னும்
மகாரங் குறுகுதல்கொள்க. 'மருளினு மெல்லா மருண்ம்' எனவரும்.
 

(19)
 

53.

மொழிப்படுத் திசைப்பினுந் தெரிந்துவே றிசைப்பினு
மெழுத்திய றிரியா வென்மனார் புலவர்.
 

இஃது   ஒற்றுங்   குற்றுகரமும்   ஈண்டு   எழுத்துக்களோடு   கூட்டி
எண்ணப்பட்டு    நிற்குமென்பதூஉஞ்    செய்யுளியலுள்  எண்ணப்படாது
நிற்குமென்பதூஉங் கூறுகின்றது.
 

இதன் பொருள் : 1தெரிந்து  -  ஒற்றுங்   குற்றுகரமும்  பொருள்தரு
நிலைமையை   ஆராய்ந்து,  மொழிப்படுத்து  இசைப்பினும் - சொல்லாகச்
சேர்த்துச்  சொல்லினும், வேறு  இசைப்பினும்  -  செய்யுளியலுள்  ஒற்றுங்
குற்றுகரமும் பொருள் தருமேனும் மாத்திரை குறைந்து நிற்கும் நிலை


1. இதற்கு   நச்சினார்க்கினியர்   தெரிந்து   என்பதை   மொழிப்படுத்
திசைப்பினும்    என்பதோடும்     கூட்டி,    ஒற்றும்    குற்றியலுகரமும்
பொருடருநிலையை    யாராய்ந்து     மொழிப்படுத்துச்    சொன்னாலும்,
செய்யுளியலின்    மாத்திரை    குறைந்து    நிற்கும்   நிலை   நோக்கி
எழுத்தெனப்படாவென்று    வேறாகக்    கூறினும்,   அவ்விரண்டிடத்தும்
எழுத்தாந்தன்மை     திரியாவென்று     பொருள்    கூறுவர்.    ஈண்டு
மெய்யெழுத்தென்றும்      குற்றியலுகரமென்றும்    ஆசிரியர்    விதந்து
கூறாமையானும் தெரிந்து என்பதற்கு இன்னதைத் தெரிந்து என்று தெரித்துக்
கூறாமையானு, மது பொருளன்றாகலின்  உரையாசிரியர்  கருத்தே இதற்குப்
பொருத்தமாம். நன்னூலாரும்  இதத்  தழுவியே  'மொழியாய்த் தொடரினு
முன்னனைத் தெழுத்தே' என்றார்.