மொழிமரபு85

மையை   நோக்கி   எழுத்தெண்ணப்படாவென்று  ஆண்டைக்கு வேறாகக்
கூறினும்,  எழுத்தியல்  திரியா  என்மனார்  புலவர் - அவ்விரண்டிடத்தும்
அரைமாத்திரை   பெற்று   நிற்கும்   ஒற்றுங்   குற்றுகரமும்   முற்கூறிய
எழுத்தாந்தன்மை திரியாவென்று கூறுவர் புலவர் என்றவாறு.
 

இதனான்  ஒற்றும்  ஆய்தமுங் குற்றுகரமும் எழுத்தாகி நின்று பொருள்
தந்தும்,  எழுத்தெண்ணவும்  அலகிடவும் பெறா வென்பது கூறினாராயிற்று.
1தெரிந்து  வேறிசைத்தல் குற்றுகரத்திற்கு  இன்றாதலின் ஏற்புழிக்கோடலான்
ஒற்றிற்கும் ஆய்தத்திற்குங் கொள்க.
 

உதாரணம் : அல் இல் உண் எண் ஒல் எனவும், கல் வில் முள் செல்
சொல்  எனவும், ஆல் ஈர் ஊர் ஏர் ஓர்  எனவும், கால் சீர்  சூல்  தேன்
கோன்   எனவும்   உயிரும்   உயிர்   மெய்யுமாகிய  2குற்றெழுத்தையும்
நெட்டெழுத்தையும்  ஒற்றெழுத்துக்கள்  அடுத்துநின்று  பொருள்தந்தவாறு
காண்க.   கடம்  கடாம்  உடையான்   திருவாரூர்   அகத்தியனார்  என
ஈரெழுத்தையும்   மூவெழுத்தையும்   நாலெழுத்தையும்   ஐயெழுத்தையும்
இறுதியிலும்   இடையிலும்  ஒற்றடுத்துநின்று  பொருள்  தந்தவாறு காண்க.
எஃகு   தெள்கு   கொக்கு   குரங்கு   என்பனவும்   எழுத்தெண்ணவும்
அலகிடவும்பெறாதகுற்றுகரம்  அடுத்து  நின்று பொருள் தந்தவாறு காண்க.
'உயிரில்  லெழுத்து  மெண்ணப்  படாஅ - உயிர்த்திற  மியக்க  மின்மை
யான' (செய்யுளியல் - 44) என்பது எழுத்து எண்ணப்பெறாமைக்கு விதி.
 

இனி  இச்  சூத்திரத்திற்கு  எழுத்துக்களைச்  சொல்லாக்கிக்  கூறினும்
பிறிதாகக்   கூறினும்   மாத்திரை  திரியாதென்று  பொருள்கூறி,  அகரம்
என்புழியும்  அ  என்புழியும்  ஆலம்  என்புழியும் ஆ என்புழியும் ககரம்
என்புழியும் க என்புழியுங் காலம் என்புழியுங் கா என்புழியும்  ஓசை ஒத்து
நிற்குமென் 


1. குற்றுகரத்தை    நேர்பும்    நிரைபுமாகக்    கோடலாற்   போலும்
வேறிசைத்தல்  குற்றுகரத்திற்கின்மையின் என்றார். இவ் வாக்கியம் முன்னும்
பின்னும்  கூறிய  பொருள்களுக்கு  முரணாகக்  காணப்படலின்  இடையில்
எழுதப்பட்டதுபோலும்.
 

2. குற்றெழுத்தைந்தும் நெட்டெழுத்தைந்து மெனவும் பாடம்.