86மொழிமரபு

றால்,  அது  முன்னர்க்  கூறிய  இலக்கணங்களாற் பெறப்படுதலிற் பயனில்
கூற்றாமென்க.
 

(20)
 

54.

அகர இகர மைகார மாகும்.
 

இது  சிலவெழுத்துக்கள்  கூடிச் சிலவெழுத்துக்கள்போல இசைக்குமென
எழுத்துப்போலி கூறுகின்றது.
 

இதன்பொருள் : அகர  இகரம் ஐகாரம் ஆகும் - அகரமும் இகரமுங்
கூட்டிச்சொல்ல ஐகாரம்போல இசைக்கும், அது 1கொள்ளற்க என்றவாறு.
 

போல என்றது தொக்கது.
 

உதாரணம் : ஐவனம் அஇவனம் எனவரும். ஆகுமென்றதனால் இஃது
இலக்கணமன்றாயிற்று.
 

(21)
 

55.

அகர உகர மௌகார மாகும்.
 

இதுவும் அது.
 

இதன் பொருள் : அகர   உகரம்   ஒளகாரம்   ஆகும் - அகரமும்
உகரமும்  கூட்டிச்சொல்ல  ஒளகாரம்போல  இசைக்கும், அது கொள்ளற்க
என்றவாறு.
 

போல என்றது தொக்குநின்றது.
 

உதாரணம் : ஒளவை அஉவை எனவரும்.
 

(22)
 

56.

அகரத் திம்பர் யகரப் புள்ளியு
மையெ னெடுஞ்சினை மெய்பெறத் தோன்றும்.
 

இதுவும் அது.
 

இதன் பொருள் : அகரத்திம்பர்  யகரப்புள்ளியும்  -  அகரத்தின்பின்
இகரமேயன்றி   யகரமாகிய   புள்ளிவந்தாலும்,   ஐயென்   நெடுஞ்சினை
மெய்பெறத்  தோன்றும் - ஐயெனப்பட்ட  நெட்டெழுத்தின்   வடிவுபெறத்
தோன்றும் என்றவாறு.


1. கொள்ளற்க என்றது பொருந்தாது, இது அக்காலத்துக் கொள்ளப்பட்டு
வழங்கி     வந்தமையின்.    இதனை    நன்னூல்    விருத்தியுரைகாரர்
சந்தியக்கரமென்றல்   பொருந்தாது.   இதனை   யாம்   'செந்தமி'   ழில்
வெளிப்படுத்திய 'போலி எழுத்து' என்னும் கட்டுரையை நோக்கித் தெளிக.