88மொழிமரபு

இதன் பொருள் : 1இகரயகரம்  இறுதிவிரவும்  -  இகரமும்  யகரமும்
ஒருமொழியின்  இறுதிக்கண்  ஓசை விரவிவரும், அவ்விகாரங் கொள்ளற்க
என்றவாறு.
 

நாய் நாஇ எனவரும்.

(25)
 

59.

பன்னீ ருயிரு மொழிமுத லாகும்.
 

இது  மேல்  எழுத்தினான்  மொழியாமாறு  உணர்த்தி அம் மொழிக்கு
முதலாமெழுத்து இவையென்பது உணர்த்துகின்றது.
 

இதன் பொருள் : பன்னீருயிரும்   -  பன்னிரண்டு   உயிரெழுத்தும்,
மொழிமுதல் ஆகும் - மொழிக்கு முதலாம் என்றவாறு.
 

உதாரணம் : அடை  ஆடை  இலை  ஈயம் உளை ஊர்தி எழு ஏணி
ஐவனம் ஒளி ஓடம் ஒளவியம் எனவரும்.
 

(26)
 

60.

உயிர்மெய் யல்லன மொழிமுத லாகா.
 

இஃது உயிர்மெய் மொழிக்கு முதலாம் என்கின்றது.
 

இதன் பொருள் : உயிர்மெய்     யல்லன    மொழிமுதல்   ஆகா -
உயிரோடுகூடிய  மெய்யல்லாதனவாகிய  தனிமெய்கள் மொழிக்கு முதலாகா
என்றவாறு.
 

எனவே,     உயிரோடுகூடிய    மெய்களே   மொழிக்கு   முதலாவன
என்றவாறாம். 2ஈண்டு   உயிர்மெய்யென்றது  வேற்றுமை  நயங்  கருதிற்று.
ஒற்றுமைநயங்  கருதின்  மேலைச் சூத்திரத்து உயிரோடுங்கூடி ஆமென்றல்
பயனின்றாம்.
 

(27)
 

61.

கதந பமவெனு மாவைந் தெழுத்து
மெல்லா வுயிரொடுஞ் செல்லுமார் முதலே. 
 

இது   மேற்பொதுவகையான்   எய்துவித்த   இருநூற்றொரு   பத்தாறு
எழுத்துக்களைச் சிறப்புவகையான் வரையறுத்து எய்துவிக்கின்றது.


1. இகர  யகரம்  இறுதி  விரவி  நடந்த  மொழி  வழக்கு  அக்காலத்
துண்டென்பது இதனா லயறிப்படும்.
 

2. உயிர்மெய்   என்றது,   உயிரோடுகூடிய   மெய்யை,  அது வருஞ்
சூத்திரத்து, 'உயிரொடுஞ் செல்லும்' என்றதனாலு மறியப்படும்.