இதன் பொருள் : க த ந ப ம எனும் ஆவைந்தெழுத்தும் - க த ந ப ம என்று கூறப்பட்ட அவ்வைந்து தனிமெய்யும், எல்லா உயிரொடுஞ் செல்லுமார் முதலே - பன்னிரண்டு உயிரோடும் மொழிக்கு முதலாதற்குச் செல்லும் என்றவாறு. |
உதாரணம் : கலை கார் கிளி கீரி குடி கூடு கெண்டை கேழல் கைதை கொண்டல் கோடை கௌவை எனவும், தந்தை தாய் தித்தி தீமை துணி தூணி தெற்றி தேன் தையல் தொண்டை தோடு தௌவை எனவும், நந்து நாரை நிலம் நீலம் நுகம் நூல் நெய்தல் நேமி நைவளம் நொச்சி நோக்கம் நௌவி எனவும், படை பால் பிடி பீடு புகழ் பூமி பெடை பேடை பைதல் பொன் போது பௌவம் எனவும், மடி மாலை மிடறு மீளி முகம் மூப்பு மெலிவு மேனி மையல் மொழி மோத்தை மௌவல் எனவும் வரும். |
(28) |
62. | சகரக் கிளவியு மவற்றோ ரற்றே அ ஐ ஒள வெனு மூன்றலங் கடையே. |
|
இதுவும் அது. |
இதன் பொருள் : சகரக்கிளவியும் அவற்றோரற்றே - சகரமாகிய தனிமெய்யும் முற்கூறியவைபோல எல்லா உயிரோடுங் கூடி மொழிக்கு முதலாம், அ ஐ ஒள எனும் மூன்றலங்கடையே - அகர ஐகார ஒளகாரமென்று சொல்லப்பட்ட மூன்று உயிரும் அல்லாத இடத்து என்றவாறு. |
உதாரணம் : சாந்து சிற்றில் சீற்றம் சுரை சூரல் செக்கு சேவல் சொல் சோறு எனவரும். சட்டி சகடம் சமழ்ப்பு என்றாற்போல்வன 'கடிசொல் லில்லை' (சொல் - 452) என்பதனாற் கொள்க. சையம் சௌரியம் என்பவற்றை வடசொல்லென மறுக்க. |
(29) |
63. | உ ஊ ஒ ஓ வென்னு நான்குயிர் வ என் னெழுத்தொடு வருத லில்லை |
|
இதுவும் அது. |
இதன் பொருள் : உ ஊ ஒ ஓ என்னும் நான்குயிர் - உ ஊ ஒ ஓ என்று சொல்லப்பட்ட நான்கு உயிரும், வ என் எழுத்தொடு |