யுண்டாமென்று கருதி இவற்றையே கூறினார். இவையிரண்டும் அகப்பாட்டெல்லையாயின. என்னை ? குமரியாற்றின் தெற்கு நாற்பத் தொன்பது நாடு கடல்கொண்டதாகலின். கிழக்கும் மேற்குங் கட லெல்லையாக முடிதலின் வேறெல்லை கூறாராயினார். வேங்கடமுங் குமரியும் யாண்டைய என்றால் வடவேங்கடந் தென்குமரியென வேண்டுதலின் அதனை விளங்கக் கூறினார். |
உலகமென்றது பலபொளொருசொல் லாதலின் ஈண்டு உயர்ந்தோரை யுணர்த்திற்று, உலகம் அவரையே கண்ணாகவுடைமையின். என்னை ? |
'வழக்கெனப் படுவ துயர்ந்தோர் மேற்றே நிகழ்ச்சி யவர்கட் டாக லான.' |
|
(மரபியல் - 92) |
என மரபியலுட் கூறுதலின். அவ் வுயர்ந்தோராவார் அகத்தியனாரும் மார்க்கண்டேயருந் தலைச்சங்கத்தாரும் முதலாயினோர். உலகத்து உலகத்தினுடைய என விரிக்க. |
வழக்காவது சிலசொற் பிறந்த அக்காலத்து இஃது அறத்தை உணர்த்திற்று, இது பொருளை உணர்த்திற்று, இஃது இன்பத்தை உணர்த்திற்று, இது வீட்டை உணர்த்திற்று என்று உணர்விப்பது. |
செய்யுளாவது 'பாட்டுரை நூலே' (செய்யு - 79) என்னுஞ் செய்யுளியற் சூத்திரத்தாற் கூறிய ஏழு நிலமும் அறமுதலிய மூன்று பொருளும் பயப்ப நிகழ்வது. முதலினென்றது முதலுகையினாலே என்றவாறு. |
எழுத்தென்றது யாதனையெனின், கட்புலனாகாவுருவுங் கட்புலனாகிய வடிவுமுடைத்தாக வேறுவேறு வகுத்துக்கொண்டு தன்னையே உணர்த்தியுஞ் சொற்கு இயைந்தும் நிற்கும் ஓசையையாம். கடலொலி சங்கொலி முதலிய ஓசைகள் பொருளுணர்த்தினவேனும் எழுத்தாகாமையானும் அவை ஈண்டுக் கொள்ளாராயினர். ஈண்டு உருவென்றது மனனுணர்வாய் நிற்குங் கருத்துப்பொருளை. அது செறிப்பச் சேறலானுஞ் செறிப்ப வருதலானும் இடையெறியப் படுதலானும் இன்பதுன்பத்தை யாக்கலானும் உருவுமுருவுங்கூடிப் பிறத்தலானும் உந்திமுதலாகத் தோன்றி எண்வகை நிலத்தும் பிறந்து கட்புலனாந் தன்மையின்றிச் செவிக்கட்சென்று உறும் ஊறுடைமையானும் விசும்பிற் பிறந்து இயங்குவதோர் தன்மையுடைமையானுங் காற்றின் குணமாவதோர் உருவாம். வன்மை மென்மை இடைமை கோடலானும் உருவேயாயிற்று. இதனைக் காற்றின் குணமேயென்றல் இவ்வாசிரியர் கருத்து. இதனை விசும்பின் குணமென்பாரும் உளர். இவ்வுரு 'உருவுரு வாகி' (எழு - 17) எனவும் 'உட்பெறு புள்ளி யுருவா கும்மே' (எழு - 14) எனவுங் காட்சிப் பொருட்குஞ் சிறுபான்மை வரும். வடிவாவது கட்புலனாகியே நிற்கும். அது வட்டஞ் சதுரம் முதலிய முப்பத்திரண்ட |