மொழிமரபு91

முதலாவும் எனவும் என்ற உம்மைகள் தொக்குநின்றன.
 

உதாரணம்: ஙகரமும் டகரமும் ணகரமும் ரகரமும் லகரமும்  ழகரமும்
ளகரமும்  றகரமும்   னகரமும்   என  மொழிக்கு  முதலாகாத  ஒன்பதும்
முதலாமாறு,  ஙக்களைந்தார்  டப்பெரிதுணந்நன்று  எனவரும்.  இவ்வாறே
ஏனையவற்றையும்   ஒட்டுக.   இனி   எனவென்றதனான்   கக்களைந்தார்
தப்பெரிது  அக்குறிது   ஆநெடிது    என   மொழிக்குமுதலாமவற்றையுந்
தம்பெயர்  கூறுதற்கு   முதலாமாறு   ஒட்டிக்கொள்க.  வரையறுக்கப்பட்டு
மொழிக்கு  முதலாகாது   நின்ற  மெய்க்கும்  இவ்விதி   கொள்க.  அவை
சகரத்து  மூன்றும்   வகரத்து  நான்கும்  ஞகரத்  தொன்பதும்  யகரத்துப்
பதினொன்றுமாம்.
 

(33)
 

67.

குற்றிய லுகர முறைப்பெயர் மருங்கி
னொற்றிய நகரமிசை நகரமொடு முதலும்.

 

இஃது   எழுத்துக்களை   மொழிக்கு   முதலாமாறு   கூறி  முறையே
குற்றியலுகரம் மொழிக்கு முதலாமாறு கூறுகின்றது.
 

இதன் பொருள்:   குற்றியலுகரம்     முறைப்பெயர்    மருங்கின் -
குற்றியலுகரமானது  முன்னிலைமுறைப்   பெயரிடத்து,  ஒற்றிய  நகரமிசை
நகரமொடு   முதலும் - தனிமெய்யாய்    நின்ற    நகரத்து    மேனின்ற
நகரத்தொடு கூடி மொழிக்கு முதலாம் என்றவாறு.
 

நுந்தை   எனவரும்.   இதனானே   முறைப்பெயர்   இடமும்  நகரம்
பற்றுக்கோடுமாயிற்று.   ஈண்டுக்     குற்றியலுகரம்     மெய்ப்   பின்னர்
நின்றதேனும்  ஒற்றுமை   நயத்தான்   மொழிக்கு   முதலென்றார்.   இது
செய்யுளியலைநோக்கிக் கூறியதாயிற்று.
 

(34)
 

68.

முற்றிய லுகரமொடு பொருள்வேறு படாஅ
தப்பெயர் மருங்கி னிலையிய லான.

 

இது மேலதற்கோர் புறனடை கூறுகின்றது.
 

இதன் பொருள்: அப்பெயர் மருங்கின் நிலையியலான - அம்முறைப்
பெயரிடத்தே   நிற்றலிலக்கணமான    குற்றியலுகரம்,   முற்றியலுகரமொடு
பொருள் வேறுபடா அது - இதழ்