70. | கவவோ டியையி னௌவு மாகும். |
|
இஃது ஈறாகாதென்ற ஒளகாரம் இன்னுழியா மென்கின்றது. |
இதன் பொருள்: ஒளவும் - முன் ஈறாகாதென்ற ஒளகாரமும், கவ்வோடு இயையின் ஆகும் - ககர வகரத்தோடு இயைந்தவழி ஈறாம் என்றவாறு. |
உதாரணம்: கௌ வௌ எனவரும். எனவே, ஒழிந்த உயிரெல்லாந் தாமே நின்றும் பதினெட்டு மெய்களோடுங் கூடி நின்றும் ஈறாதல் இதனால் பெற்றாம். இதனானே ஒளகாரம் ஏனை மெய்க்கண் வாராதென விலக்குதலும் பெற்றாம். உயிர் ஙகரத்தோடுகூடி மொழிக்கு ஈறாª மன்பது இதனால் எய்திற்றேனும் அது மொழிக்கு ஈறாகாமை 1தந்து புணர்ந்துரைத்தலான் உணர்க. இது வரையறை கூறிற்று. |
(37) |
71. | எ என வருமுயிர் மெய்யீ றாகாது. |
|
இஃது எகரந் தானேநின்ற வழியன்றி மெய்யோடு கூடினால் ஈறாகாதென விலக்குகின்றது. |
இதன் பொருள்: எ என வரும் உயிர்மெய் ஈறாகாது - எ என்று கூறப்படும் உயிர் தானே ஈறாவதன்றி யாண்டும் மெய்களோடு இயைந்து ஈறாகாது என்றவாறு. |
(38) |
72. | ஒவ்வு மற்றே நவ்வலங் கடையே. |
|
இது விலக்கும் வரையறையுங் கூறுகின்றது, |
இதன் பொருள்: ஒவ்வும் அற்று - ஒகரமும் முன் சொன்ன எகரம்போலத் தானே ஈறாவதன்றி மெய்களோடு இயைந்து ஈறாகாது, நவ்வலங்கடையே - நகரவொற்றோடு அல்லாத இடத்தில் என்றவாறு. |
உதாரணம்: நொ கொற்றா 'நொ அலையனின்னாட்டைநீ' எனவரும். |
(39) |
|
1. தந்து புணர்ந்துரைத்தலான் என்றது, உள்பொருள்ளல்லாததனை உள்பொருள்போலத் தந்து கூட்டி உரைத்தலை. இங்கே உயிர் ஙகரத்தோடு கூடி ஈறாவதுபோலக் கூறியது தந்து புணர்த்தல். இஃது ஒருத்தி. |