73. | ஏ ஓ எனுமுயிர் ஞகாரத் தில்லை. |
|
இது சில உயிர் சில உடலோடேறி முடியாதென விலக்குகின்றது. |
இதன் பொருள்: ஏஓ எனும் உயிர் ஞகாரத்தில்லை - ஏஓ என்று கூறப்பட்ட இரண்டுயிருந் தாமேநின்றும் பிறமெய்களோடு நின்றும் ஈறாதலன்றி ஞகாரத்தோடு ஈறாதலில்லை என்றவாறு. |
எனவே, ஏனையுயிர்கள் ஞகாரத்தோடு ஈறாமென்றாராயிற்று. |
உதாரணம் : உரிஞ உரிஞா உரிஞி உரிஞீ உரிஞு உரிஞூ இவை எச்சமும், 1வினைப்பெயரும் பற்றி வரும். 2அஞ்ஞை மஞ்ஞை இவை பெயர். ஏனையைந்தும் விலக்கப்பட்டன. உரிஞோ என்பது 'கடிசொல்லில்லை' என்பதனாற் கொள்க. |
(40) |
74. | உ ஊ கார நவவொடு நவிலா. |
|
இதுவும் அது. |
இதன் பொருள் : உ ஊகாரம் - உகர ஊகாரங்கள் தாமே நின்றும் பிறமெய்களோடு நின்றும் பயில்வதன்றி, நவவொடு நவிலா - நகரவொற்றோடும் வகரவொற்றோடும் பயிலா என்றவாறு. |
எனவே, ஏனையுயிர்கள் நகர வகரங்களோடு வருமாயின. |
உதாரணம் : நகரம் பொருந என வினைப்பெயராகியும், நா நீ நே எனப் பெயராகியும், நை நொ நோ என 3வியங்கோளாகியும் வரும். பொருநை என்றுங் காட்டுப. வகரம் உவ வே என வியங்கோளாயும், உவா செவ்வி வீ வை எனப் பெயராயும் வரும் ஒருவ ஒருவா ஒருவி ஒருவீ ஒளவை என்றுங் காட்டுப. ஈண்டு விலக்காத ஏனை யுயிர்களோடு வந்த நகர வகரங்கள் அக்
|
|
1. வினைப்பெயரென்றது, தொழிற்பெயரை. |
2. அஞ்ஞை என்றது தாயை. அகநானூற்றில் "என் அஞ்ஞை சென்றவாறே" என வருதலா னுணர்க. ஈண்டு மகளைத்தாய் என்றது உவப்புப்பற்றி. |
3. வியங்கோள் - ஏவல். |