சூ. 148 :

வேற்றுமைக் கண்ணும் வல்லெழுத் தல்வழி

மேற்கூ றியற்கை ஆவயி னான

(6)
 
க-து:

மேற்கூறிய   அவ்இரண்டு  ஈறுகளும்  வேற்றுமைக்கண் இயல்பு
கணங்களொடு புணரும் இலக்கணம் கூறுகின்றது.
 

பொருள்:  மேற்கூறிய   அவ்விரு  ஈறுகளும்  வேற்றுமைப்  பொருட்
புணர்ச்சிக்   கண்ணும்,    வருமொழி   வன்கணமல்லாதவழி   மேற்கூறிய
இயல்பினவாம். வல்லெழுத்தாயின்  திரியும்   என்பது  புள்ளிமயங்கியளுள்
கூறப்படும்.
 

எ-டு:  மண், பொன் என நிறுத்தி - ஞெகிழ்ச்சி, நீட்சி, மாட்சி,  யாப்பு,
வன்மை எனவும், அழகு, ஆக்கம், இயல்பு,  ஈட்டம்,  உயர்ச்சி,   ஊட்டம்,
எழுச்சி, ஏற்றம், ஐது, ஒடுக்கம், ஓக்கம் எனக்கூட்டி   இயல்பாமாறு  கண்டு
கொள்க.