பொருள்:ஙஞணநமன என்னும் இவ்வாறனையும் மெல்லெழுத்து எனக் கூறுவர் புலவர்.
இவை ஆறும் மேற்கூறிய வல்லெழுத்துப் பிறக்குமிடத்தே பிறந்து நிற்க, மூக்கின் வளியிசை அவற்றை வெளிப்படுத்தலின் அவ்வளியிசையின் மென்மை, எழுத்தின் மேலேற்றிக் கூறப்பட்டது. இவற்றை மென்கணம் என்பர்.