சூ. 225 :வேற்றுமைக் கண்ணும் அதனோ ரற்றே
(23)
 

க - து:

ஆகார  ஈற்றுப்பெயர்  வேற்றுமைவழிப் புணருமாறு கூறுகின்றது.
 

பொருள்: ஆகார ஈற்றுப் பெயர்,   வேற்றுமைப்   பொருட்புணர்ச்சிக்
கண்ணும் அல்வழிப் புணர்ச்சியொடு ஒத்த  தன்மைத்தேயாம்.  அஃதாவது;
கசதபக்கள் வரின் மிக்குப்புணரும் என்றவாறு.
 

எ. டு: தாராக்கால்;   மூங்காக்கால்,   செவி,  தலை, புறம் எனவரும்.
(தாரா-ஒருபறவை; மூங்கா-கீரிப்பிள்ளை)