சூ. 259 :வேற்றுமைக் கண்ணும் அதனோ ரற்றே
(57)
 

க - து:

உகர ஈற்று    வேற்றுமைப்       பொருட்புணர்ச்சி   வருமாறு
கூறுகின்றது.
 

பொருள்: உகர  ஈற்றுப்  பெயர்   வேற்றுமைப்   பொருட்புணர்ச்சிக்
கண்ணும், அகர ஈற்று அல்வழியொடு ஒத்த தன்மைத்தேயாம்.
 

எ. டு: கடுக்காய், செதிள், தோல், பூ எனவரும். கடுக்கடுமை,  சிறுமை,
பெருமை எனவும் ஒட்டிக் கொள்க.