சூ. 266 :வேற்றுமைக் கண்ணும் அதனோ ரற்றே

(64)
 

க-து:

ஊகார ஈற்று வேற்றுமைப் புணர்ச்சி வருமாறு கூறுகின்றது.
 

பொருள் :ஊகார  ஈற்று   வேற்றுமைப்  பொருட்புணர்ச்சிக்கண்ணும்
அல்வழிக்குக் கூறிய இயல்பிற்றாய்க் கசதபக்கள் மிக்குப்புணரும்.
 

எ. டு:கொண்மூக்குழாம்,   செலவு,   தோற்றம்,   பறைவு  எனவரும்.
(பறைவு-முழக்கம்)  தழூக்கடுமை,  சிறுமை, தீமை, பெருமை எனத் தொழிற் பெயரொடும் ஒட்டிக் கொள்க. ஆடூக்கை, மகடூக்கை என்பனவும் அன்ன.