சூ. 337 :ஏனை எகினே அகரம் வருமே

வல்லெழுத் தியற்கை மிகுதல் வேண்டும்
(42)
 

க - து:

எகின் என்னும் பறவைப் பெயர்க்குச் சிறப்பு விதி கூறுகின்றது.
 

பொருள் :மரமல்லாத, பறவையை உணர்த்தும் எகின் என்னும் சொற்கு
அகரச்சாரியை வரும். வல்லெழுத்து இலக்கணம் மிகுதல்வேண்டும்.
 

எ.டு :  எகினக்கால், செவி,  தலை,  புறம் எனவரும். ஏனைக்கணங்கள்
இயல்பாக  வரும்.  எ.டு : எகின  ஞாற்சி,  நீட்சி, மாட்சி, யாப்பு, வன்மை,
அழகு எனவரும்.
 

‘இயற்கை’  என்றதனான் மெல்லெழுத்து  மிகுதல்   கொள்க  என்பார்
உரையாசிரியர்.  மெல்லெழுத்துமிகின்  அஃது  அம்முச்சாரியை  எனற்கும்
ஏற்குமாகலின் ஒவ்வாதென்க.