பொருள் : ‘வல்’ என்னும் சூதாடுகருவியை உணர்த்துஞ் சொல் தொழிற்பெயர்க் கோதிய இயல்பிற்றாய் இருவழியும் புணரும். அஃதாவது உகரம் பெற்று வல்லெழுத்துவரின் மிக்கும் ஞநமவரின் இயல்பாயும் புணரும் என்றவாறு.
எ - டு: வல்லுக்கடிது, சிறிது, தீது, பெரிது எனவும் வல்லுஞான்றது, நீண்டது, மாண்டது எனவும் வல்லுக்கடுமை, சிறுமை, தீமை, பெருமை எனவும் வல்லுஞாற்சி, நீட்சி, மாட்சி எனவும் இருவழியும் வரும்.