சூ. 183 : | கிழவி முன்னர்த் தற்புகழ் கிளவி |
| கிழவோன் வினைவயின் உரிய என்ப |
(40) |
க - து : | இது தலைவற்குத் தற்புகழ்ச்சி குற்றமாகாத இடங் கூறுகின்றது. |
பொருள் :தலைவி முன்னர்த்தன்னைப் புகழ்ந்து கூறும் கிளவி தலைவன் ஓதற்குப் பிரிதல் முதலாய வினையை மேற்கொண்டவிடத்து உரியவாகும் எனக்கூறுவர் புலவர். |
"இடனின்றி இரந்தோர்க்கொன் றீயாமை இழிவு" எனக் |
"கடனிறந்து செயல்சூழ்ந்த பொருள் பொருளாகுமோ" |
என்னும் தோழி கூற்றுள் தலைவன் இளிவரவு கொள்ளேன் எனத்தன்னைப் புகழ்ந்து கூறியவாறு கண்டுகொள்க. |