சூ. 106 :முன்னைய மூன்றும் கைக்கிளைக் குறிப்பே
(14)
 

க - து :

பாங்கர்   நிமித்தம்   பன்னிரண்டனுள்   அகனைந்திணைக்கண்
கைக்கிளை பாங்காக வருவன இவை என்கின்றது.
 

பொருள் :பாங்கர்   நிமித்தம்   பன்னிரண்டனுள்   முன்னர்  நின்ற,
பிரிந்தவழிக் கலங்கல், நிற்பவை நினைஇ நிகழ்பவை   உரைத்தல்,  குற்றங்
காட்டிய   வாயில்   பெட்புறல்   ஆகிய மூன்றும்  அகனைந்திணைக்கண்
கைக்கிளை ஒழுக்கமாக அமையும்,