சூ. 131 :

முயற்சிக் காலத்து அதர்ப்பட நாடிப்

புணர்த்த லாற்றலும் அவள்வயி னான

(39)
 
க - து :

தோழி   இருவரையும்   கூட்டுவித்தலைச்   செய்யும்   மரபு
கூறுகின்றது.
  

பொருள் : தலைவற்குக்  குறையை  நேர்ந்து   தலைவியைக்    குறை
நயப்பிக்கும் காலத்து எவ்வாற்றானும் பிழைபடாத நெறிமுறையை ஆராய்ந்து
அவ்விருவரையும்     கூட்டுவித்தலைப்      புரிதலும்   தோழியிடத்தான
கடப்பாடாகும். அதர் = நெறி.
 

அதர்ப்பட  நாடுதலாவது :  அஞ்சியச்சுறுத்தலும்      சேட்படுத்தலும்
முதலாகத் தலைவனது காதலைப் பெருக்கி அவன் வரைதலை மேற்கொள்ள
ஆவன செய்தலும், அவ்வகை பிறவுமாம்.