சூ. 169 : | முன்னிலைப் புறமொழி எல்லா வாயிற்கும் |
| பின்னிலைத் தோன்றும் என்மனார் புலவர் |
(26) |
க - து : | இதுவுமது. |
பொருள் : குறையிரந்து வேண்டுதலாகிய பின்னிலை முயற்சிக்கண் தோழி முதலாய எல்லாவாயில்கட்கும் முன்னிலைப் புறமொழியாகக் கூறும் கூற்றுத் தோன்றுமெனக் கூறுவர் புலவர். |
முன்னிலைப் புறமொழியாவது முன்னிலையாரைப் படர்க்கை யாகப்புறப்படுத்து அவர்க்குரைப்பது. |
எ - டு : | உண்கடன் வழிமொழிந் திரக்குங்கால் முகனும்தாம் |
| கொண்டது கொடுக்குங்கால் முகனும் வேறாகுதல் |
| பண்டுமிவ் வுலகத் தியற்கை அஃதின்றும் |
| புதுவ தன்றே புலனுடை மாந்திர் |
| தாயுயிர் பெய்த பாவை போல |
| நலனுடையார் மொழிக்கட் டாவார்தாந் தந்நலம் |
| தாதுவேர் பறவையின் அருந்திறல் கொடுக்குங்கால் |
| ஏதிலார் கூறுவதெவனோ நின்பொருள் வேட்கை |
(கலி-22) |
எனவந்தவாறு கண்டு கொள்க. |