கணபதி துணை

யாப்பருங்கலக் காரிகை

மூலமும் உரையும்

1. உறுப்பியல்

பாயிரம்

     தெய்வ வணக்கமும் செயப்படுபொருளும்
  1. (1) கந்த மடிவில் கடிமலர்ப் பிண்டிக்கண் ணார்நிழற்கீழ்
எந்த மடிக ளிணையடி யேத்தி யெழுத்தசைசீர்
பந்த மடிதொடை பாவினங் கூறுவன் பல்லவத்தின்
கந்த மடிய வடியான் மருட்டிய தாழ்குழலே.
 
என்பது (2) காரிகை. 1நூல் உரைக்கு மிடத்து நூற்பெயரும், காரணமும், ஆக்கியோன்
பெயரும், அளவும், பயனும் 2 உரைத்து உரைக்கற் பாற்று.
 
     அற்றேல் இந்நூல் என்ன பெயர்த்தோ எனின், (3) பாளித்தியம் என்னும் 3 பாகத
இலக்கணமும் (4) பிங்கலம் என்னும்
 
     (1) கந்தம் மடிவு இல் - மணம் ஒழிதல் இல்லாத. கடிமலர் - புதுமலர். கண்ணார்
நிழல் - இடம் மிக்க நிழல். பாவினம் - பாவும் இனமும். சந்தம் - அழகு.

     (2) காரிகை - இலக்கணம் கூறும் கட்டளைக் கலித்துறை.

     (3) பாளித்தியம் என்னும் பாகத இலக்கணம் - பாளித்தியம் என்னும் பிராகிருத
மொழியின் இலக்கணம்; பிராகிருத மொழிகளுள் ஒன்றாகிய பாளி மொழியின்
இலக்கணம் கூறும் நூல் போலும்.

     (4) பிங்கலம் - பிங்கலாசாரியார் செய்தது. சந்தோவிசிதி - யாப்பிலக்கணம்.
பிங்கலச் சந்தஸ் ஸூத்ரம் என்று வழங்கும். சூத்திரமும் காரிகையுமாக உள்ளது;
வேதாங்கமான யாப்பைப்பற்றி உரைப்பது; 'வடநூலுடையாரும் பிங்கலம் முதலிய
சந்தோவிகிதிகளுள் விருத்தச்சாதி விகற்பங்களாற் கிடந்த

     (பிரதிபேதம்) 1. யாதானமொரு நூலுரைக்கு. 2. எடுத்துரைத் துரைக்கற். 3.
பிராகிருத.