| (6) 'ககர முதல னகர விறுவாய்ப் பதினெண் ணெழுத்து மெய்யென மொழிப' |
என்றார் ஆகலின். |
மெய் எனினும், உடம்பெனினும், உறுப்பெனினும், புள்ளி எனினும், ஒற்றெனினும் ஒக்கும். என்னை? |
| 'மெய்யுடம் புறுப்பொற் றிவைதா மொருபொருள் செய்யு 4மென்று செப்பினர் புலவர்.' 'மெய்யி னியற்கை புள்ளியொடு நிலையல்,' |
(தொல். எழுத். சூ. 15.) |
| 'எகர ஒகரத் தியற்கையு மற்றே,' |
(தொல். எழுத். சூ. 16.) |
| 'மெய்யி னியக்க மகரமொடு சிவணும்,' |
(தொல். எழுத். சூ. 46.) |
| 'மெய்யுயிர் நீங்கிற் றன்னுரு வாகும்' |
(தொல். எழுத். சூ. 139.) |
5 எனவுஞ் சொன்னார் ஆகலின். |
மெய்யே; ஏகாரம்: எண்ணேகாரம். என்னை? |
| 'எண்ணே கார மிடையிட்டுக் கொளினும் எண்ணுக்குறித் தியலு மென்மனார் புலவர்.' |
(தொல். சொல். சூ. 283.) |
|
அதற்குச் சார்.....றெழுத்துக்கு முன்னாக வல்லின வெழுத்திற்குப் பின்னாக வருமாய்தம்' என்பது காணப்படுகிறது. (6) 'ககர முதல' என்ற தொடர் சில பிரதிகளில் இல்லை; தொல். எழுத். சூ. 9. அங்ஙனமே உள்ளது. இச்சூத்திரத்திற்குப் பிரதியாகச் சில சுவடிகளில் 'ககரமுதல னகர வீறா, மும்மையின் வந்த மூவாறு முடம்பே' என்பதும் 'ககர வொற்றுமுத னகரவொற்றீறாப், பகருமொற் றெழுத்துப் பதினெட்டு மெய்யே' என்பதும் காணப்படுகின்றன. |
|
(பி - ம்) 4. மென்மனார் தெரிந்திசினோரே. 5. என்றாராகலின். |