| 13 புனலாமென வனலாமெனப் புகையா நின்றன புலிமா னேற்றை
என்றாங் கிவையிவை யியங்கலி னெந்திறத் தினிவரல் வேண்டலந் 14தனிவரல் விலக்கலின் இறுவரைமிசை யெறிகுறும்பிடை இதுவென்னென வதுநோனார் கரவிரவிடைக் களவுளமது கற்றோரது கற்பன்றே.' |
இது முதலடியும் மூன்றாமடியும் பதினான்கு சீராய் அல்லாத அடியிரண்டும் பதினாறு சீராய் இடையிடை குறைந்து வந்த ஆசிரி யத்துறை. |
| ' (9) இரங்கு குயின்முழவா வின்னிசையாழ் தேனா அரங்க மணிபொழிலா வாடும்போலு மிளவேனில் அரங்க மணிபொழிலா வாடுமாயின் மரங்கொன் மணந்தகன்றார் நெஞ்ச மென்செய்த திளவேனில்.' |
இது நான்கடியா யிடையிடை குறைந்து 15இடைமடக்காய் வந்த ஆசிரியத்துறை. |
| 'கடையத னயலது கடைதபு நடையவும் நடுவடி மடக்காய் நான்கடி யாகி யிடையிடை குறைநவு மகவற் றுறையே' |
என்பது யாப்பருங்கலம் (சூ. 76.) |
'குறைவில் தொல் சீர் அகவல் விருத்தம் கழிநெடில் நான் கொத்து இறுவது' எ - து. கழிநெடிலடி நான்காய்த் தம்முள் அளவொத்து வருவன ஆசிரிய விருத்தமெனப்படும் எ - று. |
['குறைவில் தொல் சீர்' என்று சிறப்பித்தவனால் எண் சீரின் மிக்க சீரால் வருமடி சிறப்பிலவெனக் கொள்க.] |
| ' (10) விடஞ்சூ ழரவி னினடநுடங்க விறல்வாள் வீசி விரையார்வேங் |
|
(9) தேன் - வண்டுகள். குயில் முழவாக, தேன் யாழாக, பொழில் அரங்கமாக இளவேனில் ஆடும். அகன்றார் நெஞ்சம் மரமா: (10) மாதங்கி = மதங்கி - ஆடல் பாடல்களில் வல்ல ஒரு பெண். தாம் தாம் - தாள ஒத்தைக் குறிக்கும் ஒலி. தண்ணுமை - ஒரு தோற்கருவி விசேடம். தண்ணுமை தாந்தாம் என்னும். |
|
(பி - ம்.) 13. புனலாமெனக் கன. 14. தனிவர லெனத் தலைவிலக்கலின் 15. நடுவடி மடக்காய். |