104

யாப்பருங்கலக் காரிகை

 
     (8) சுரிதகம் எனினும், அடக்கியல் எனினும், வைப்பு எனினும், வாரம் எனினும்,
போக்கியல் எனினும் ஒக்கும்.
 
  'தந்துமுன் நிற்றலிற் றரவே தாழிசை
3 ஒத்தாழ் தலினஃ தொத்தா ழிசையே
தனிதர நிற்றலிற் றனிச்சொல் குனிதிரை
நீர்ச்சுழி போல நின்றுசுரிந் திறுதலிற்
சோர்ச்சியில் புலவர் சுரிதக மென்பர்'
 
என்று காரணக்குறி சொன்னாரும் உளர்.
 
     இனித் தரவு தாழிசைகட்கு அடி அளவு ஆமாறு. 'சுருங்கிற்று மூன்றடி' (கா. 42)
என்னுங் காரிகையுட் போக்கிச் சொல்லுதும்.
 

வரலாறு

  '(9) வாணெடுங்கண் பனிகூர வண்ணம்வே றாய்த்திரிந்து
தோணெடுந்தண் டகைதுறந்து துன்பங்கூர் 4பசப்பினவாய்ப்
பூணொடுங்கு முலைகண்டும் பொருட்பிரிதல் வலிப்பவோ'
 
இது தரவு,
 
  'சூருடைய 5நெடுங்கடங்கள் சொலற்கரிய வென்பவாற்
பீருடைய நலந்தொலையப் பிரிவாரோ பெரியவரே,

'சேணுடைய 6கடுங்கடங்கள் செலற்கரிய வென்பவால்
நாணுடைய நலந்தொலைய நடப்பாரோ 7நயமிலரே,

'சிலம்படைந்த வெங்கானஞ் 8சீரிலவே யென்பவாற்
புலம்படைந்த நலந்தொலையப் போவாரோ பொருளிலரே.
 
இவை மூன்றுந் தாழிசை.
 

     (8) சுரிதகம் - உள்ளடங்கும் ஓசையை யுடையது; சுரிதல் - நீர்ச் சுழி போன்று
சுருங்கி முடிதல். அடக்கியல் - உள்ளடக்கி இசைக்கப்படுவது. வைப்பு : ஈற்றில்
வைக்கப்படுவது. வாரம் - வரம்பாக வுடையது. போக்கியல் செல்லுதலையுடையது.

      (9) தகை - இயல்பு. பசப்பினவாய் - பிரிவால் ஏற்படும் நிறவேறுபாட்டை
யுடையனவாய். வலிப்பவோ - துணிவார்களோ. சூர் - அச்சம், தெய்வமகளிர். கடங்கள்
- பாலை நிலத்து வழிகள். பீர் - பசலை. சிலம்பு - மலை. புலம்பு - தனிமை.
 

     (பி - ம்.) 3. ஒத்தாழ்ந்திறினஃ, ஒத்தாங்கிசைத்தலி னொத்தா. 4. பசப்பினவாம்,
பசப்பினவால். 5. கடுங்கடங்கள். 6. வெங்கானம். 7. நல்லவரே 8. செலற்கரிய
வென்பவாற்.