எனவாங்கு, |
இது தனிச்சொல். |
| 'அருளெனு மிலராய்ப் பொருள்வயிற் பிரிவோர் பன்னெடுங் காலமும் வாழியர் பொன்னொடுந் தேரொடுந் தானையிற் பொலிந்தே.' |
இது சுரிதகம். |
இது தரவு மூன்றடியாய்த் தாழிசை மூன்றும் இரண்டடியாய்த் தனிச்சொற் பெற்று மூன்றடி ஆசிரியச் சுரிதகத்தால் இற்ற நேரிசை யொத்தாழிசைக் கலிப்பா. |
வெள்ளைச் சுரிதகத்தா லிற்றன யாப்பருங்கல விருத்தியுட் கண்டுகொள்க. |
| 'தரவு தாழிசை தனிச்சொற் சுரிதகம் எனநான் குறுப்பின தொத்தா ழிசைக்கலி' |
என்றார் காக்கை பாடினியார். |
| 'தரவொன் றாகித் தாழிசை மூன்றாய்த் 9தனிச்சொ லிடைகிடந்து சுரிதகந் தழுவ வைத்த மரபின தொத்தா ழிசைக்கலி' |
என்றார் மயேச்சுரர். |
'நீர்த் திரைபோல் மரபு ஒன்று நேரடி முச்சீர் குறள்நடுவே 10மடுப்பின் அது அம்போதரங்க வொத்தாழிசையே' எ - து. கரைசாரக் கரைசார ஒருகாலைக் கொருகாற் சுருங்கிவரு நீர்த் தரங்கமே போல நாற்சீரடியும், முச்சீரடியும், இருசீரடியுமாகிய (10) அசையடிகளைத் தாழிசைக்கும் தனிச்சொற்கும் நடுவே 11கொடுத்துத் தரவு, தாழிசை, அம்போதரங்கம், தனிச்சொல். சுரிதகம் என்னும் ஐந்து உறுப்புடைத்தாய் (அவைசொன்ன பெற்றியின் திரியாது) வருமெனின் அது அம்போதரங்க வொத்தாழிசைக் கலிப்பா என்று வழங்கப்படும் எ-று. |
|
(10) அசையடி - அம்போதரங்க அடிகள்; அசையும் சீராகப் பயின்று வரும் அடி என்க. சொற்சீரடி என்பதும் அது. |
|
(பி - ம்.) 9. தனிச்சொல் வந்து சுரிதகம். 10. மடுப்பது. 11. தொடுத்து. |