106

யாப்பருங்கலக் காரிகை

 
      (11) அம்போதரங்க வுறுப்பு எனினும், அசையடி எனினும். பிரிந்திசைக்குறள்
எனினும், சொற்சீரடி எனினும், எண் எனினும் ஒக்கும்.
 
     'மரபொன்றும்' என்று சிறப்பித்தவதனால் அசையடிதான் 12அளவடி ஈரடியாய்
இரண்டும், அளவடி ஓரடியாய் நான்கும், சிந்தடி ஓரடியாய் எட்டும், குறளடி ஓரடியாய்ப்
பதினாறுமாய் வருவது சிறப்புடைத்து. (12) எட்டும் பதினாறுமென்று சொல்லப்பட்டன.
13நான்கும் எட்டுமாய் வருவனவுமுள எனக் கொள்க. இவற்றைப் பேரெண், அளவெண்,
இடையெண், சிற்றெண் என்ப.
 
  'ஈரடி யிரண்டு மோரடி நான்கும்
முச்சீ ரெட்டு மிருசீ ரிரட்டியும்
அச்சீர் குறையினு மம்போ தரங்கம்'

'அனைய வாகிய வசையடி நான்குந்
தனியொடு தாழிசை யிடைவரு மென்ப'
 
என்றார் ஆகலின்.
 

வரலாறு

' (13) கெடலரு மாமுனிவர் கிளர்ந்துடன் றொழுதேத்தக்
கடல்கெழு கனைசுடரிற் கலந்தொளிரும் வாலுளைய
அழலவிர் சுழல்செங்க ணரிமாவாய் மலைந்தானைத்
தாரொடு முடிபிதிர்த்த தமனியப் பொடிபொங்க
 

     (11) அம்போதரங்கம் - நீர்அலை. தோன்றுமிடத்துப் பெரிதாக இருந்து கரையைச்
சாரச் சாரக் குறைந்து போவது அலையின் இயல்பு. எண் : அளவடி ஈரடி ஓர்
எதுகையாக இரண்டு வருவது பேரெண். அளவடி ஓரடி நான்கு வருவது அளவெண்.
சிந்தடியாய் வருவது இடையெண். குறளடியாய் வருவது சிற்றெண்.

     (12) எட்டும், பதினாறும் பாதியாக வருதல்போல் நான்கும் என்றதும் இரண்டாக
வருவதும் உண்டு.

      (13) உளைய - பிடரி மயிரையுடைய. நரசிங்கமூர்த்தியின் கண்களுக்குக் கடலில்
எழும் கதிர் உவமை. கலி - கடல் இரண்டாந்தாழிசையிற் கூறப்படுவது சிசுபாலனுடன்
மலைந்தது போலும். மூன்றாந்தாழிசையிற் கூறப்படுவது கண்ணன் கொல்லேறு தழுவி
நப்பின்னையை மணந்த வரலாறு.
 

     (பி - ம்.) 12. ஈரடியா லிரண்டும், ஓரடியால் நான்கும், சிந்தடியாலெட்டும்
குறளடியாற் பதினாறுமாய். 13. சுருங்கிவரப் பெறுமாயினுமெனக் கொள்க.