108

யாப்பருங்கலக் காரிகை

 
  நீரகல மளந்தோய் நீ
நிழறிகழைம் படையோய் நீ
 
     இவை 22முச்சீ ரோரடி நான்கு அம்போதரங்கம்.
 
(1) 'ஊழி நீ (2) உலகு நீ
(3) உருவு நீ (4) யருவு நீ
(5) ஆழி நீ (6) யருளு நீ
(7) அறமு நீ (8) மறமு நீ'.
     இவை 23இருசீ ரோரடி யெட்டு அம்போதரங்கம்.
 

என வாங்கு,

இது தனிச்சொல்.
 
  'அடுதிற லொருவநிற் பரவுது மெங்கோன்
தொடுகழற் கொடும்பூட் பகட்டெழின் மார்பிற்
கயலொடு கலந்த சிலையுடைக் கொடுவரிப்
புயலுறழ் தடக்கைப் போர்வே லச்சுதன்
தொன்று முதிர்கட லுலக முழுதுடன்
ஒன்றுபுரி திகிரி யுருட்டுவோ னெனவே.'
 
இஃது ஆசிரியச் சுரிதகம்.
 
     இஃது எட்டும் பதினாறும் என்று சொல்லப்பட்ட முச்சீரடியும் இருசீரடியும்
நான்கும் எட்டுமாய்ச் சிறப்பில்லாத எண்ணடியான் வந்த அம்போதரங்க
வொத்தாழிசைக் கலிப்பா. எட்டும் பதினாறுமாய் வருவன யாப்பருங்கல விருத்தியுட்
கண்டுகொள்க. ('நலங்கிளர்......ஓங்குக வெனவே' சூ. 83. மேற்.)
 
 
'அரவொன்று மல்குல்' என்பது மகடூஉ முன்னிலை.

'நீர்த்திரை போல நிரலே முறைமுறை
ஆக்கஞ் சுருங்கி யசையடி தாழிசை
விட்டிசை விரியத் தொடுத்துச் சுரிதகம்
24 தாங்கிச் தழுவுந் தரவினோ டைந்தும்
யாப்புற் றமைந்தன வம்போ தரங்கம்'

 
என்றார் காக்கை பாடினியார்.
 

     (பி - ம்.) 22. இடையெண். 23. சிற்றெண். 24. தாக்கித் தொடுத்த