செய்யுளியல் 'அசையடி முன்ன'

109

 

உதாரண முதனினைப்பு

  [வாணெடுங் கண்பனி நேரிசை யாகும் மதர்த்திருண்டு
சேணுற 25வோடிக் குழையிட றிச்செருச் செய்யும்விழி
நாணுந் திருவு மறிவுஞ் செறிவு முடையநல்லாய்
ஏணுங் கெடலரு மாமுனி யம்போ தரங்கமென்னே.
 
     இவ்வுரைச் சூத்திரக் காரிகையின் வழியே முன்வந்த இலக் கியங்களை
முதனினைத்துக் கொள்க.]

(10)
 


     (பி - ம்.) 25. நீண்டு குழைமீது பாய்ந்து செயிர்த்துழைக்கண் நாணுற வண்குமி
ழிற்சேரு மொண்க ணறு நுதலாய் காணுங் கெடலரு மாமுனி யம்போ தரங்கமென்றே.'
 

- - - -

வண்ணகவொத்தாழிசைக் கலிப்பா, வெண்கலிப்பா

  31. அசையடி முன்ன ரராகம்வந் தெல்லா வுறுப்புமுண்டேல்
வசையறு வண்ணக வொத்தா ழிசைக்கலி வான்றளைதட்
டிசைதன தாகியும் வெண்பா வியைந்துமின் பான்மொழியாய்
1 விசையறு சிந்தடி யாலிறு மாய்விடின் வெண்கலியே.
 
     இ - கை. வண்ணக வொத்தாழிசைக் கலிப்பாவும் வெண் கலிப்பாவும்
ஆமாறுணர்த்....று
 
     'அசையடி முன்னர் அராகம் வந்து எல்லா வுறுப்புமுண்டேல் வசையறு வண்ணக
வொத்தாழிசைக் கலி' எ - து. அம்போதரங்க வுறுப்புக்கும் தாழிசைக்கும் நடுவே
அராகவுறுப்புப் பெற்றுத் தரவு, தாழிசை, அராகம், அம்போதரங்கம், தனிச்சொல்,
சுரிதகம் என்னும் ஆறு உறுப்பினையும் உடைத்தாய் வருமெனின் அது வண்ணக
ஒத்தாழிசைக் கலிப்பா எனப்படும் எ - று.
 
     (1) அராகம் எனினும், 2அடுக்கியல் எனினும், முடுக்கியல் எனினும், வண்ணகம்
எனினும் ஒக்கம். [என்னை?
 

     (1) அராகம் - முடுகிச் சொல்லும் ஓசையை யுடையது. அடுக்கியல் - கருவிளச்
சீர்களே பெரும்பாலும் பயின்று ஓசையடுக்குடன் இயல்வது. வண்ணகம் -
முடுகியலோசையாகிய சந்தத்தை யுடையது.
 

     (பி -ம்.) 1. விசையுறு. 2. அடுக்கிசை.