மறுவறு மூவினமாவன: வல்லினம் மெல்லினம் இடையினம் என இவை. வல்லின மாவன : க ச ட த ப ற. மெல்லினமாவன: |
ங ஞ ண ந ம ன. இடையினமாவன : ய ர ல வ ழ ள. என்னை? |
| 'வல்லெழுத் தென்ப க ச ட த ப ற' 'மெல்லெழுத் தென்ப ங ஞ ண ந ம ன' 'இடையெழுத் தென்ப ய ர ல வ ழ ள' |
என்றார் ஆகலின். |
(தொல். எழுத். சூ. 19 - 21.) |
6 மறுவறு மூவினம்' என்று சிறப்பித்த வதனால், அவை உயிர் மெய்யாகிய காலத்தும் அப்பெயரானே வழங்கப்படும் எனக் கொள்க. என்னை? |
| 'விதப்புக் கிளவி வேண்டியது விளைக்கும்' |
என்றார் ஆகலின். |
உயிர் மெய்யாவன : உயிரும் மெய்யுங் கூட்டி உச்சரிக்கப்படா நின்ற பன்னிரு பதினெட்டு இருநூற் றொருபத்தாறெழுத்தும் எனக் கொள்க. என்னை? |
| 'உயிரீ ராறே மெய்ம்மூ வாறே அம்மூ வாறு முயிரொடு முயிர்ப்ப இருநூற் றொருபத் தாறுயிர் மெய்யே.' 'புள்ளி யில்லா வெல்லா மெய்யும் உருவுரு வாகி யகரமொ டுயிர்த்தலும் ஏனை யுயிரோ டுருவுதிரிந் துயிர்த்தலும் ஆயீ ரியல வுயிர்த்த லாறே.''மெய்யின் வழிய துயிர்தோன்று நிலையே' |
என்றார் ஆகலின். |
(தொல். எழுத். சூ. 17-18.) |
'மைதீர் உயிர்மெய்' என்று சிறப்பித்த வதனால் ஏறிய உயிரின் அளவே உயிர்மெய்க்கும் அளவெனக் கொள்க. என்னை? |
| (7) உயிர்மெய்க் களவு முயிரள வென்ப' |
என்றார்ஆகலின். (8) |
|
(7) சில பிரதிகளில் இச்சூத்திரத்துக்குப் பதிலாக, 'மெய்யோ டியையினு முயிரியறிரியா' தொல். எழுத். 10. என்பது காணப்படுகிறது. (8) இதன்பின் ஒரு பிரதியில், 'செந்தமிழ் எழுத்து ஆறாவன: எகர மொகரமாய்தம் ழகரம், றகர ளகரந் தமிழ் பொதுமற்றே' எனக்கொள்க' என்ற தொடர் காணப்படுகிறது. |
|
(பி - ) 6. மூவினமென்னாது மறுவறுவென்று. |