110

யாப்பருங்கலக் காரிகை

 
'அராக மென்ப தடுக்கியல் வண்ணகம்
முடுக்கிய லெனவும் மொழிந்தனர் புலவர்'
 
என்றார் ஆகலின்.]
 
     'வசையறு வண்ணகம்' என்று சிறப்பித்தவதனால் அராக வுறுப்புத்தான் அளவடி
முதலாகிய எல்லாவடியானும் வரப்பெறும் எனக் கொள்க.
 
     அடி வரையறையாவது : சிறுமை நான்கடியானும், பெருமை எட்டடியானும், இடை
ஐந்தடியானும் ஆறடியானும் ஏழடியானும் வரப்பெறுமெனக் கொள்க. என்னை?
 
  'அளவடி முதலா வனைத்தினு நான்கடி
முதலா 3விரட்டியு முடுகிய னடக்கும்'
 
என்றார் ஆகலின்.

 

வரலாறு

  'விளங்குபணிப் பசும்பொன்னின் 4விரித்தமைத்துக் கதிர்கான்று
துளங்குமணிக் கனைகழற்காற் றுறுமலர நறும்பைந்தார்ப்
பரூஉத்தடக்கை மதயானைப் 5பணையெருத்தின் 6மிசைத்தோன்றிக்
குரூஉக்கொண்ட மணிப்பூணோய் குறையிரந்து முன்னாட்கண்
மாயாத வனப்பினையாய் மகிழ்வார்க்கு மல்லார்க்குத்
தாயாகித் தலையளிக்குந் தண்டுறை 7யூரகேள் ;
 
இது தரவு.
 
'காட்சியாற் கலப்பெய்தி யெத்திறத்துங் கதிர்ப்பாகி
மாட்சியாற் 8றிரியாத மரபொத்தாய் கரவினாற்
பிணிநலம் 9பிரிவெய்திப் பெருந்தடந்தோள் வனப்பழிய
அணிநலந் தனியேவந் தருளுவது மருளாமோ ;

'அன்பினா லமிழ்தளைஇ யறிவினாற் பிறிதின்றிப்
பொன்புனை பூணாகம் பசப்பெய்தப் பொழிலிடத்துப்
பெருவரைத்தோ ளருளுவதற் கிருளிடைத் தமியையாய்க்
கதிர்வளைத்தோள் 10கதிர்ப்பிக்குங் காதலுங் காதலோ ;
 

     (பி - ம்.) 3. விரட்டிசை. 4. விசித்தமைத்துக். 5. பகட்டெழினெரி குஞ்சிக்.
6. மிசைத்தோன்றுங். 7. யூரநீ. 8. றணியாத, பிரியாத. 9. பெரிதெய்திப், பீரெய்தப். 
10. குளிர்ப்பிக்கும், அதிர்ப்பிக்கும், வளைப்பிக்கும். பெரிதெய்தப்,