| 'அச்சொலப் பட்ட வுறுப்போ 2டராகவடி வைத்த நடையது வண்ணக மாகும்' |
என்றார் காக்கைபாடினியார். |
'வான் றளைதட்டு இசைதன தாகியும் வெண்பா இயைந்தும், விசையறு சிந்தடியால் இறுமாய்விடின் வெண்கலியே' எ - து. கலித்தளை தட்டுக் கலியோசை தழுவியும், வெண்டளை தட்டு வெள்ளோசை தழுவியும் வந்து ஈற்றடி முச்சீரான் இறுமெனின் அது வெண்கலிப்பா என்றும் கலிவெண்பா என்றும் பெயரிட்டு வழங்கப்படும் எ - று. |
'இன்பால் மொழியாய்' எ - து. மகடூஉ முன்னிலை. 'விசையறு சிந்தடி' என்று சிறப்பித்த வதனால் வேற்றுத் தளை தட்டு அருகியும் வரப்பெறும் எனக் கொள்க. |
வரலாறு |
| 'வாளார்ந்த மழைத்தடங்கண் வனமுலைமேல் வம்பனுங்கக் கோளார்ந்த பூணாகங் குழைபுரளக் கோட்டெருத்தின் மாலைதாழ் கூந்தலார் வரன்முறையான் வந்தேத்தச் சோலைதாழ் பிண்டிக்கீழ்ச் சூழ்ந்தவர்தஞ் சொன்முறையான் மனையறமுந் துறவறமு மண்ணவர்க்கும் விண்ணவர்க்கும் வினையறுக்கும் வகைதெரிந்து வீடொடுகட் 28டிவையுரைத்த தொன்மைசால் கழிகுணத்தெந் துறவரசைத் தொழுதேத்த நன்மைசால் வீடெய்து மாறு.' |
இது (2) தன்றளையானும் துள்ளலோசையானும் வந்து ஈற்றடி முச்சீராய் வெண்பாப்போல முடிந்தமையான் வெண்கலிப்பா. |
| ' (3) சுடர்த்தொடீஇ கேளாய் தெருவினா மாடும் மணற்சிற்றில் காலிற் சிதையா வடர்ச்சியபொற் கோதை பரிந்து வரிப்பந்து கொண்டோடி |
|
(2) இது பெரும்பாலும் சலித்தளையாலும் சிறுபான்மை வெண்டளையாலும் துள்ளலோசை பெற்று வந்த வெண்கலிப்பா. இங்ஙனம் வருவது சிறப்பில் வெண்கலிப்பா. கலித்தளையானே வருவதும், வெண்சீர் வெண்டளையானே வருவதும் சிறப்புடை வெண்கலிப்பா. இருவகை வெண்டளைகளான் வருவது கலிவெண்பா. (3) இது வெண்டளை பெற்றுப் பலவடிகளில் வந்தமையின் இதற்கும் பஃறொடை வெண்பாவுக்கும் வேற்றுமை என்னை எனின்; கலிவெண்பா அல்லது |
|
(பி - ம்.) 27. டராகம். 28. டிவை யுரைத்துத். |