| நோதக்க செய்யுஞ் சிறுபட்டி மேலோர்நாள் அன்னையும் யானு மிருந்தேமா லில்லுளே உண்ணுநீர் வேட்டே னெனவந்தாற் கன்னை அடர்பொற் சிரகத்தால் வாக்கிச் சுடரிழாய் உண்ணுநீ ரூட்டிவா வென்றா ளெனயானும் தன்னை யறியாது சென்றேன்மற் றென்னை வளைமுன்கை பற்றி நலியத் தெருமந்திட் டன்னா யிவனொருவன் செய்ததுகா ணென்றேனா அன்னை யலறிப் படர்தரத் தன்னையான் உண்ணுநீர் விக்கினா னென்றேனா வன்னையும் தன்னைப் புறம்பழித்து நீவமற் றென்னைக் கடைக்கண்ணாற் கொல்வான்போ னோக்கி நகைக்கூட்டஞ் செய்தானக் கள்வன் மகன்.' |
(கலி. 51.) |
இது வெள்ளோசை தழுவி வெண்டளை தட்டுச் சிந்தடியா லிற்று ஒரு பொருண்மேல் வந்தமையாற் (4) கலிவெண்பா. |
| 'ஒருபொரு ணுதலிய வெள்ளடி யியலாற் றிரிவின்றி நடப்பது கலிவெண் பாட்டே' |
என்றார் தொல்காப்பியனார் (பொருள். சூ. 154.) |
| 'வெண்டளை தன்றளை யென்றிரு தன்மையின் வெண்பா வியலது வெண்கலி யாகும்' |
என்றார் காக்கை பாடினியார். |
இனிப் பிற தளையான் வருமாறு : |
| 29'ஏர்மலர் நறுங்கோதை யெருத்தலைப்ப விறைஞ்சித்தன் வார்மலர்த் தடங்கண்ணார் வலைப்பட்டு வருத்தியவென் தார்வரை யகன்மார்பன் றனிமையை யறியுங்கொல் சீர்மலி கொடியிடை சிறந்து.' |
|
வெண்கலிப்பா என்னும் இது வெள்ளோசை தழுவிப் பெரும்பாலும் துள்ளலோசைத்தாய் வருவது. பஃறொடை வெண்பா செப்ப லோசைத்தாய் வருவது. (4) பிற்காலத்துக் கலிவெண்பாக்களா லாகிய உலா, தூது முதலியன நேரிவை வெண்பாவோடொத்த இவ்விரண்டு அடிகள் ஒரு கண்ணியாக இரண்டாம் அடியினிறுதியிற் றனிச்சீர் பெற்றுப் பலகண்ணிகளால் முடிவன வாகும். |
|
(பி - ம்.) 29. ஏர்மலி. |