இஃது ஆசிரியத் தனையானும் கலித்தலையானும் வந்தமையால் வெண்கலிப்பா. |
பிறவும் யாப்பருங்கல விருத்தியுட் காண்க. |
உதாரண முதனினைப்பு |
| (5) [நின்று விளங்கு மணிப்பசும் பொன்னிற மாறுறுப்பும் ஒன்றிய வண்ணக வொத்தா ழிசைக்கலி யோசைகுன்றாத் துன்றிய வாளார் மழையுஞ் சுடர்த்தொடீஇ யேர்மலரும் என்றிவை வெண்கலிப் பாவுக் கிலக்கிய மேந்திழையே. |
இவ்வுரைச் சூத்திரக் காரிகையின் வழியே வண்ணக வொத் தாழிசைக் கலிப்பாவுக்கும் வெண்கலிப்பாவுக்கும் காட்டிய இலக் கியங்களை முதனினைத்துக் கொள்க.] |
(11) |
|
(5) 30, 31-ஆம் காரிகைகளின் உதாரண முதனினைப்பு எல்லாம் அமைந்து பின்வருமாறு முதனினைப்புச் செய்யுட்கள் இரண்டு இங்கே பல பிரதிகளிற் காணப்படுகின்றன |
| 'வாணெடுங் கண்ணென்ப நேரிசை யாகுமம் போதரங்கம் கேணெடுந் துன்பங் களையுங் கெடலரு வண்ணகமே பூண்முலை மாதே விளங்கு மணிவெண் கலியுரைப்பின் வாணுதல் வாளார் சுடர்த்தொடீஇ யேர்மலர் மற்றிவையே' 'வளங்கெழு வாணெடுங் கண்ணுங் கெடலறு மாமுனியும் நலங்கிளர் நேரிசை யம்போ தரங்கவொத் தாழிசையே விளங்கு மணிப்பசும்பொன்னென்ப வண்ணகம் வெண்கலிப்பாத் துளங்கிய வாளார் சுடர்த்தொடீஇ யேர்மலர் சொல்லினரே.' |
கொச்சகக் கலிப்பா வகை |
| 32. தரவே தரவிணை தாழிசை தாமுஞ் சிலபலவாய் மரபே யியன்று மயங்கியும் வந்தன வாங்கமைத்தோள் அரவே ரகலல்கு லம்பேர் நெடுங்கண்வம் பேறுகொங்கைக் குரவே கமழ்குழ லாய்கொண்ட வான்பெயர் கொச்சகமே. |
இ - கை. தரவு கொச்சகக் கலிப்பாவும், தரவிணைக் கொச்சகக் கலிப்பாவும், சிஃறாழிசைக் கொச்சகக் கலிப்பாவும், பஃறாழிசைக் கொச்சகக் கலிப்பாவும், மயங்கிசைக் கொச்சகக் கலிப்பாவும் ஆமாறுணர்த்....று. |