'கொச்சகமே' எ - து - இறுதி விளக்கெனக் கொள்க. |
அவற்றுக்குச் செய்யுள் வருமாறு : |
| 'செல்வப்போர்க் கதக் கண்ணன்' |
(கா. 11, மேற்) |
என்பது தனிச்சொல்லும் சுரிதகமும் இல்லாத தன்றளையான் வந்த தரவு கொச்சகக் கலிப்பா. |
| 'குடநிலைத் தண்புறவிற்......சென்றவாறே' |
(கா. 21, மேற்.) |
என்பது தனிச்சொற் பெற்றுச் சுரிதகத்தால் இற்ற தரவு கொச்சகக் கலிப்பா. |
| 'வடிவுடை நெடுமுடி வானவர்க்கும் வெலற்கரிய கடிபடு நறும்பைந்தார்க் காவலர்க்குங் காவலனாம் கொடிபடு 2மணிமாடக் கூடலார் கோமானே. |
இது தரவு. |
எனவாங்கு, |
இது தனிச்சொல். |
| 2'துணைவளைத்தோ ளிவண்மெலியத் தொன்னலந் துறப்புண்டாங் கிணைமலர்த்தா ரருளுமே லிதுவிதற்கோர் மாறென்று துணைமலர்த் தடங்கண்ணார் துணையாகக் கருதாரோ. |
இது தரவு. |
அதனால், |
இது தனிச்சொல். |
| 'செவ்வாய்ப் பேதை யிவடிறத் தெவ்வா றாங்கொலிஃ தெண்ணிய வாறே' |
இது சுரிதகம். |
இஃது இடையிடை தனிச்சொற் பெற்றுச் சுரிதகத்தால் இற்ற தரவிணைக் கொச்சகக் கலிப்பா. |
இனிச் சுரிதகம் இல்லாத தரவிணைக் கொச்சகக் கலிப்பா வந் துழிக் கண்டு கொள்க. |
| (3)'பரூஉத்தடக்கை மதயானைப் பணையெருத்தின் மிசைத் தோன்றிக், குரூஉக்கொண்ட வெண்குடைக்கீழ்க் குடைமன்னர் புடைசூழப் |
|
(3)குரூஉக் கொண்ட - நிறத்தைக் கொண்ட. உச்சியார்....தேவர். அருவரையால் - பெருமை பொருந்திய மலையினால். பகை - இந்திரன் ஆயர் மீது |
|
(பி - ம்.) 2. வரைமார்பிற். வரைமாடக். |