இஃது இடையிடை தனிச்சொற் பெற்று நான்கடித் தரவு ஒன்றும், மூன்றடித் தாழிசை மூன்றும், சுரிதகமுமாய் நேரிசை யொத்தாழிசைக் கலிப்பாவிற் சிறிது வேறுபட்டுத் தன்றளையான் வந்தமையாற் சிஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா. |
| 'தண்மதியேர் முகத்தாளைத் தனியிடத்து நனிகண்டாங் குண்மதியு முடைநிறையு முடன்றளர முன்னாட்கட் கண்மதியொப் பிவையின்றிக் காரிகையை நிறைகவர்ந்து பெண்மதியின் மகிழ்ந்தநின் பேரருளும் பிறிதாமோ. |
இது தரவு. |
| இளநல மிவள்வாட விரும்பொருட்குப் பிரிவரயேல் தளநல முகைவெண்பற் றாழ்குழ றளர்வாளோ. தகைநல 6மிவைவாடத் தரும்பொருட்குப் பிரிவாயேல் வகைநல 7மிவள்வாடி வருந்தியில் லிருப்பாளோ. 'அணிநல னிவள்வாட வரும்பொருட்குப் பிரிவாயேல் மணிநலன் மகிழ்மேனி மாசொடு மடிவாளோ. 'நாம்பிரியோ மினியென்று நறுநுதலைப் பிரிவாயேல் ஓம்பிரியோ மெனவுரைத்த வுயர்மொழியும் பழுதாமோ. 'குன்றளித்த திரடோளாய் கொய்புனத்தற் கூடியநாள் அன்றளித்த வருண்மொழியா லருளுவது மருளாமோ. 'சில்பகலு மூடியக்காற் சிலம்பொலிச்சீ றடிபரவிப் பல்பகலுந் தலையளித்த 8பணிமொழியும் பழுதாமோ. |
இவை ஆறும் தாழிசை. |
அதனால், |
இது தனிச்சொல். |
| 'அரும்பெற லிவளினுந் தரும்பொரு ளதனினும் பெரும்பெற லரியன வெறுக்கையு மற்றே |
|
(4) கண்மதி - கண்ணினால் மதிக்கப்படும். தள தல முகை - முல்லையின் நல்ல முகைகள். ஓம் பிரியோம் ; ஓம் : உடன்பாட்டை உணர்த்தும் சொல். அளித்த : உவம வாசகம். |
|
(பி - ம்.) 6. மிவள்வாடத். 7. மிவை வாடி. 8. பனிமொழியும். |