12

யாப்பருங்கலக் காரிகை

 
     'மதிமருட்டும் சிறுநுதல் பேர் அமர்க்கண் செய்ய வாய் ஐய நுண்ணிடையாய்
எ-து. மகடூஉ முன்னிலை. என்னை?
 
'இடம்பட மெய்ஞ்ஞானங் கற்பினு மென்றும்
அடங்காதா ரென்று மடங்கார் - தடங்கண்ணாய்
உப்பொடு நெய்பா றயிர்காயம் பெய்தடினும்
கைப்பறா பேய்ச்சுரையின் காய்'

(நாலடி. 116.)

எனப் பிறரும் தடங்கண்ணாய் என்று இடையே (9) மகடூஉ முன் னிலை சொல்லினாரும்
உளரெனக் கொள்க.
 
     மதி என்பது ஈண்டுப் 7பிறை; அஃது,
      (10) இருகோட் டொருமதி யெழில்பெற மிலைச்சினை'

(நக்கீரர் திருவெழுகூற்)

என்றாற்போலக் கொள்க. அல்லதூஉம், (11) அறிவினை மயக்குஞ் சிறுநுதன் முதலாகிய
உறுப்புக்களை உடையாய் என்றுமாம்.
 
     'அறிஞர் உரைத்த அளபும்' எ-து புலவராய் சொல்லப்பட்ட அளபெடைகளும்
எ-று.
அளபெனினும் அளபெடை எனினும் புலுதம் எனினும் ஒக்கும். என்னை?
 
8 'அளபே புலுத மாயிரு பெயரும்
அளபெடை யென்பரறிந்திசி னோரே'
என்றார் ஆகலின். அவை போக்கிச் சொல்லுதும்.
 
     அசைக்கு உறுப்பாவன எ-து. இப்பதின்மூன்று 9 திறத்தெழுத்தும் அசைக்கு
உறுப்பாவன எ-று.
 

     (9) இலக்கணப் பாவில் மகடூஉ முன்னிலை வந்தமைக்கு உதாரணமாக இலக்கியச்
செய்யுளில் அது வந்தமையைக் காட்டியது அத்துணைச் சிறப்பன்று போலும்.


     (10) பிறையை மதி என்றமைக்கு இஃது உதாரணம்; மதி-பூர்ண சந்திரன்;
பிறையின் இரு நுனிகளையும் கோடு என்றார். இருகோடும் ஒன்றுகூடின் மதியமாம்;
'கோடுகூடு மதியம்' (புறநா. 67:4.)

     (11) நுதல் அறிவினை மயக்குதல் : 'பிறையென, மதிமயக் குறூஉ நுதலும்' (குறுந்.
226); 'ஒண்ணுதற் கோஒ வுடைந்ததே ஞாட்பினுள், நண்ணாரு முட்குமென் பீடு' (குறள்.
1088.)
 


     (பி - ம்.) 7. பிறையை. 8. அளபொடு புலுத, அளபே புலுத;  9. வகை
யெழுத்துக்களும்