| விழுமிய தறிமதி வாழி 9தழுவிய காதலிற் றரும்பொருள் சிறிதே.' |
இது சுரிதகம். |
இது நான்கடித் தரவும் இரண்டடித் தாழிசை ஆறும் தனிச் சொல்லும் நான்கடிச் சுரிதகமும் பெற்று வந்த பஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா. |
| '(5) மணிகிளர் நெடுமுடி மாயவனுந் தம்முனும்போன் றணிகிளர் நெடுங்கடலுங் கானலுந் தோன்றுமால் நுரைநிவந் தவையன்ன நொய்ப்பறைய சிறையன்னம் இரைநயந் திறைகூரு மேமஞ்சார் துறைவகேள். 10 'மலையென மழையென மஞ்செனத் திரைபொங்கிக் 11 கனலெனக் காற்றெனக் கடிதுவந் திசைப்பினும் விழுமியோர் வெகுளிபோல் வேலாழி யிறக்கலா தெழுமுன்னீர் பரந்தொழுகு மேமஞ்சார் துறைவகேள். |
இவை இரண்டும் தரவு. |
| 'கொடிபுரையு நுழைநுசுப்பிற் குழைக்கமர்ந்த திருமுகத்தோள் தொடிநெகிழ்ந்த தோள்கண்டுந் துறவலனே யென்றியால். 'கண்கவரு மணிப்பைம்பூட் கயில்கவைஇய சிறுபுறத்தோள் தெண்பனிநீ ருகக்கண்டுந் 12திரியலனே யென்றியால், |
|
(5) மணற் பரப்பினால் வெண்மையாகத் தோன்றும் கானல் பலராமனுக்கு உவமை. மாயவனையும் பலராமனையும் சமணர் தம் மதத்துப் பெரியோராகக் கருதுவர். நொய் பறைய - நொய்ம்மையான தூவியையுடைய. இறை கூரும் - தங்குதல் மிக்க. வேலாழி - கரை ; இருபெயரொட்டு. நுழை நுசுப்பு - நுண்ணிய இடை. கயில் கவைஇய சிறுபுறத்தோள் - கொக்கியோடு கூடிய கயிற்றை அணிந்த கழுத்தினள் என்றபடி. நாய்கன் - வணிகன். வீழ்சுடரின் நெய் - விளக்கச் சுவாலையிலிருந்து சொட்டும் நெய். அடும்பு அமல் இறும்பு - அடுப்பங் கொடிகள் நிறைந்த குறுங்காடு. திமில் - படவு. படவுகளுக்குக் குதிரைகள் உவமை. சுடரொளி மறை தொறும் - சூரியனொளி மறையும் போதெல்லாம். கால் - காற்று. தவிர்ப்பாய்மன் ; மன் - கழிவுப் பொருளது. காமக்கு - காமத்துக்கு. இன்பக்கு - இன்பத்துக்கு. பொறை - பாரம். |
|
(பி - ம்.) 9. கெழுமிய. 10. வரையென. 11. சுரையெனக் 12. தெரியலனே. |