| 'இணைபிரிந்தார் 17மார்பின்றி யின்பக்கு மருந்துரையாய் துணைபிரிந்த தமருடையேன் றுயர்தீரு மாறுரையாய். | இவை ஆறுத் தாழிசை. | எனவாங்கு, | இது தனிச்சொல். | | 'பகைபோன் றதுதுறை பரிவா யினகுறி நகையிழந் ததுமுகம் நனிவாடிற் றுடம்பு தகையிழந் தனதோள் தலைசிறந் ததுதுயர் புகைபரந் ததுமெய் பொறையா யிற்றுயிர். | இவை இருசீர் ஓரடி எட்டு அம்போதரங்கம். | அதனால், | இது தனிச்சொல். | | 'இனையது நினையா லனையது பொழுதால் நினையல் வாழி தோழி தொலையாப் பனியொடு கழிக வுண்கண் என்னொடு கழிகவித் துன்னிய நோயே.' | இது சுரிதகம். | இது தரவு இரண்டும், தாழிசை ஆறும், தனிச்சொல்லும் அராகம் நான்கும், பெயர்த்தும் ஆறு தாழிசையும், தனிச்சொல்லும், எட்டம்போதரங்க வுறுப்பும், தனிச்சொல்லும் பெற்று நான்கடிச் சுரிதகத்தால் இற்றுக் கலிக்கு ஓதப்பட்ட ஆறுறுப்பும் மிக்குங் குறைந்தும் பிறழ்ந்தும். உறழ்ந்தும் மயங்கியும் வந்தமையால் மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா. ஆசிரியத்தினோடும் வெண்பாவினோடும் மயங்கி வந்த மயங் கிசைக் கொச்சகக் கலிப்பா, 'காமர் கடும்புனல் கலந்தெம்மோ டாடுவாள்' (கலி. 39) என்னும் பழம்பாட்டினுள் மயங்கி வந்தவாறு யாப்பருங்கல விருத்தியுட் (சூ 86.) கண்டுகொள்க. |
| (பி - ம்.) 17. மார்பின்றி, | |
|
|