| அடுக்கிசை யந்தந் தொடுத்தன பல்கியும் கலிவயிற் கடிந்த சீரிடை மிடைந்தும் நாற்சீ ரிறந்த சீரொடு சிவணியும் முச்சீ ரிருசீ ரம்போ தரங்கம் அச்சீர் முடிவிடை யழிவில தழுவியும் கொச்சகக் கலியெனக் கூறவும் படுமே' |
எனவும் சொன்னார் மயேச்சுரரும் எனக் கொள்க. |
| 'தரவின் றாகித் தாழிசை பெற்றும் தாழிசை யின்றித் தரவுடைத் தாகியும் (7) எண்ணிடை யிட்டுச் சின்னங் குன்றியும் அடுக்கிய லின்றி யடிநிமிர்ந் தொழுகியும் யாப்பினும் பொருளினும் வேற்றுமை யுடையது கொச்சக வொருபோ காகு மென்ப' |
என்றார் தொல்காப்பியனார் (பொருள். சூ. 461.) |
இவற்றுக் கிலக்கியம் யாப்பருங்கல விருத்தியுட் கண்டு கொள்க. |
| (8) [குடநிலைத் தண்புற விற்செல்வப் போர்முற் றரவுரைப்பின் வடிவுடை யாகுந் தரவிணை மன்னும் பரூஉத்தடக்கை அடிவரு சிஃறா ழிசைதண் மதிபஃ றாழிசையாம் மடவரன் மாதே மணிகிள ராகு மயங்கிசையே. |
இவ்வுரைச் சூத்திரக் காரிகையின் வழியே கலிப்பாவிற்குக் காட்டிய இலக்கியங்களை முதனினைத்துக் கொள்க.] |
(12) |
|
(7) எண் - அம்போதரங்க உறுப்பு. (8) இங்கே இருத்தற்குரிய முதனினைப்புக் காரிகை. பிரதிதோறும் வேறுபட்டுள்ளது. சில வேறுபாடுகள் வருமாறு; |
| குடநிலைத் தண்செல்வப் போர்க்கதக் கண்ணன் றரவுரைப்பின் வடிவுடை யாகுந் தரவிணை மன்னும் பரூஉத்தடக்கை இடமிக வாய்ச்சில தாழிசை தண்மதி யேர்பலவாய் மடலவிழ் கோதை மணிகிள ராகு மயங்கிசையே. தரவாங் குடநிலை யுஞ்செல்வப் போருந் தரவிணையாம் பரவார் வடிவுடைச் சிஃறா ழிசையே பரூஉத்தடக்கை வரவாய தண்மதி பஃறா ழிசையே மயங்கிசையேர் குரவார் குழலி மணிகிள ராகுமைங் கொச்சகமே. |