126

யாப்பருங்கலக் காரிகை

 
'(2) வாள்வரி வேங்கை வழங்குஞ் சிறுநெறியெங்
கேள்வரும் போழ்தி னெழால்வாழி வெண்டிங்காள்
கேள்வரும் போழ்தி 4னெழாதாய்க் குறாலியரோ
5நீள்வரி நாகத் தெயிறே வாழி வெண்டிங்காள்.
 
     இது ஈற்றடி மிக்கு ஏனையடி மூன்றும் ஒத்துத் தனியே வந்த கலித்தாழிசை.
 
'பூண்ட பறையறையப் பூத மருள
நீண்ட சடையா னாடுமே
நீண்ட சடையா னாடு மென்ப
மாண்ட சாயல் மலைமகள் காணவே காணவே.'
 
     இஃது இரண்டாமடி குறைந்து, ஈற்றடி மிக்கு முதலடியும் மூன்றாமடியும் ஒத்து
வந்தமையால், ஈற்றடி மிக்கு, ஏனையடிகள் ஒவ்வாது வந்த கலித்தாழிசை.
 
'அடியெனைத் தாகியு மொத்துவந் தளவினிற்
கடையடி மிகுவது கலித்தா ழிசையே'
 
என்பது யாப்பருங்கலம் (சூ. 87.)
 
  'அந்தடி மிக்குச் சிலபல வாயடி
தந்தமு ளொப்பன தாழிசை யாகும்'
 
என்றார் காக்கை பாடினியார்.
 
     'கலித்துறையே நெடிலடி நான்காய் நிகழ்வது' எ - து. ஐஞ்சீரடி நான்காய் [ஒத்து]
வருவது (3) கலித்துறை எ - று.
 

வரலாறு

  'யானுந் தோழியு மாயமு மாடுந் துறைநண்ணித்
தானுந் தேரும் பாகனும் வந்தென் னலனுண்டான்
 

     (2) கேள் - உறவினர் ; என்றது தலைவனை. எழால் - தோன்றாதே. உறாலியர் -
உறாது ஒழிக.

      (3) கலித்துறை : இது கலிநிலைத்துறை என்றும், காவியங்களிற் பயின்று
வருவதனால் காப்பியக்கலித்துறை என்றும் வழங்கும். ஐஞ்சீரடி நான்காய்
எழுத்தெண்ணித் தொடுக்கப்படும் கட்டளைக்கலித்துறை இதனின் வேறுபட்டது.
இதனுடைய இலக்கணத்தைக் காரிகை 1, உரையிற் காண்க.
 

     (பி - ம்.) 4. னுறாதாய்க், னெழாலாய்க். 5. நீள்வரை.