செய்யுளியல் ' அடிவரை யின்றி '

127

 
தேனும் பாலும் போல்வன சொல்லிப் பிரிவானேற்
கானும் புள்ளுங் கைதையு மெல்லாங் கரியன்றே.'

'வென்றான் வினையின் ....நீங்கி நின்றார்.'

(கா. 13, மேற்.)
 

     இவை நெடிலடி நான்காய் வந்தமையாற் கலித்துறை.
 
  'நெடிலடி நான்காய் நிகழ்வதுகலித்துறை'
 
என்பது யாப்பருங்கலம் (சூ. 88.)
 
  'ஐஞ்சீ ரடியி னடித்தொகை நான்மையோ
டெஞ்சா தியன்றன வெல்லாங் கலித்துறை'
 
என்றார் காக்கை பாடினியார்.
 
     'நேரடி ஈரிரண்டாய்விடின் அதுவாகும் விருத்தம்' எ - து. நாற்சீரடி நான்காய்
வருமெனின் அது கலிவிருத்தம் எ - று.
 
  'அளவடி நான்கின கலிவிருத் தம்மே'
 
என்பது யாப்பருங்கலம் (சூ. 89.)
 
  நாலொரு சீரா னடந்த வடித்தொகை
ஈரிரண் டாகி யியன்றன யாவையுங்
காரிகை சார்ந்த கலிவிருத் தம்மே'
 
6 என்றார் காக்கை பாடினியார்.
 

வரலாறு

  'வேய்தலை நீடிய வெள்ளி விலங்கலின்
ஆய்தலி னொண்சுட ராழியி னான்றமர்
வாய்தலி 7னின்றனர் வந்தென மன்னன்முன்
நீதலை நின்றுரை நீள்கடை காப்போய்,
 

(சூளா, சீயவதைச். 87.)
 

  'தேம்பழுத் தினிய......தவள மாடமே.'
 

(கா. 13, மேற்,)
 

     இவை நாற்சீர் நாலடியாய் வந்தமையாற் கலிவிருத்தம்.
 
     'திருத்தகு மெல்லியலே' எ - து. மகடூஉ முன்னிலை.
 

     (பி - ம்.) 6. என்றாரு முளரெனக் கொள்க. 7. னீடினர்.