உதாரண முதனினைப்பு |
| [கொய்நினை யாய்தினை மென்றினை வாள்வரி 8பூண்ட பறை எய்திய தாழிசை யானும்வென் 9றானுங் கலித்துறையே மைதிக ழோதி 10வடிவே னெடுங்கண் வனமுலையாய் மெய்திகழ் வேய்தலை தேம்பழுத் 11தென்ப விருத்தங்களே. |
இவ்வுரைச் சூத்திரக் காரிகையின் வழியே கலித்தாழிசை கலித்துறை கலிவிருத்தங்கட்குக் காட்டிய இலக்கியங்களை முதனினைத்துக் கொள்க.] |
|
(பி - ம்.) 8. பூண்டகலிக் கெய்திய. 9. றான்றுறையேவிருத்தம். றானுந் துறைவிருத்தம். 10. வரிநெடுங் கண்ண வனமுலையாய், வரிநெடுங்கண்வன மென்முலையாய், 11. தாமென்று வேண்டுவரே. |
வஞ்சிப்பாவும் இனமும் |
| 34. குறளடி நான்கின மூன்றொரு தாழிசை கோதில்வஞ்சித் துறையொரு வாது தனிவரு மாய்விடிற் சிந்தடிநான் கறைதரு காலை யமுதே விருத்தந் தனிச்சொல்வந்து மறைதலில் வாரத்தி னாலிறும் வஞ்சிவஞ் சிக்கொடியே. |
இ - கை. வஞ்சித்தாழிசையும் வஞ்சித்துறையும் வஞ்சி விருத்தம் வஞ்சிப்பாவுக்கு ஈறு ஆமாறும் உணர்த்....று. |
'குறளடி நான்கின மூன்று ஒரு தாழிசை' எ - து. இரு சீரடி நான்காய் மூன்று செய்யுள் ஒரு பொருண் மேல் அடுக்கி வருமெனின் அது வஞ்சித் தாழிசை எனப்படும். எ - று. |
'கோதில்' என்று மிகுத்துச் சொல்லியவதனால் அவை ஒரு பொருண் மேல் மூன்றடுக்கி வரினே தாழிசை யாவதெனக் கொள்க. |
| 'குறளடி நான்கவை கூடின வாகி முறைமையி னவ்வகை மூன்றிணைந் தொன்றாய் வருவன வஞ்சித் தாழிசை யாகும்' |
என்றார் காக்கை பாடினியார். |
வரலாறு |
| 'மடப்பிடியை மதவேழம் தடக்கையான் வெயின்மறைக்கும். |