| இடைச்சுர மிறந்தார்க்கே நடக்குமென் மனனேகாண். 'பேடையை யிரும்போத்துத் 1தோகையால் வெயின்மறைக்கும் காடக மிறந்தார்க்கே ஓடுமென் மனனேகாண். 'இரும்பிடியை யிகழ்வேழம் பெருங்கையான் வெயின்மறைக்கும் அருஞ்சுர மிறந்தார்க்கே விரும்புமென் மனனேகாண்.' |
இவை இருசீரடி நான்காய் ஒரு பொருண்மேல் மூன்றக்கி வந்தமையால் வஞ்சித் தாழிசை. |
'கோதில் வஞ்சித் துறை ஒருவாது தனிவருமாய்விடின்' எ - து. இருசீரடி நான்காய் ஒரு பொருண்மேல் ஒன்றே வரின் அது வஞ்சித்துறை எனப்படும் எ - று. |
வரலாறு |
| 'மைசிறந்தன மணிவரை கைசிறந்தன காந்தளும் பொய்சிறந்தனர் கரதலர் மெய்சிறந்திலர் விளங்கிழாய்.' 'திரைத்த சாலிகை......................மாலையாய்.' |
(கா. 13, மேற்.) |
இவை இருசீரடி நான்கினால் ஒரு பொருண்மேல் தனியே வந்தமையால் வஞ்சித்துறை எனக் கொள்க. |
| 'குறளடி நான்மையிற் கோவை மூன்றாய் வருவன வஞ்சித் தாழிசை தனிவரிற் றுறையென மொழிப துணிந்திசி னோரே' |
என்பது யாப்பருங்கலம் (சூ. 91,) |
|
| ['ஒன்றின் னான்மையு முடைத்தாக் குறளடி வந்தன வஞ்சித்துறை யெனலாகும்.'] |
என்றாரும் உளரெனக் கொள்க. |
|
(பி - ம்.) 1. கோடையால். |