ஆவனவே; ஏகாரம்; ஈற்றசை யேகாரம்; தேற்றம் எனினும் அமையும். என்னை? |
| 'தேற்றம் வினாவே பிரிநிலை யெண்ணே ஈற்றசை யிவ்வைந் தேகா ரம்மே' |
என்றார் ஆகலின். |
(சிதால். சொல். சூ. 252.) |
| 'குறினெடி லளபெடை யுயிருறுப் புயிர்மெய் வலிய மெலிய விடைமையோ டாய்தம் இ உ ஐ யென் மூன்றன் குறுக்கமோ டப்பதின் மூன்று மசைக்குறுப் பாகும்' |
என்றார் காக்கை பாடினியாரும் எனக் கொள்க. |
இனி மூவுயிர்க் குறுக்கமும் அளபெடைகளும் ஆமாறு சொல்லுதும்: |
அவற்றுட் குற்றிய லுகரம் வருமாறு : நெடிற்கீழும், நெடி லொற்றின் கீழும், குறிலிணைக் கீழும், குறிலிணை யொற்றின்கீழும், குறினெடிற்கீழும், குறினெடி லொற்றின் கீழும், குற்றொற்றின் கீழும் என்று இவ்வேழிடத்து ஆறு வல்லெழுத்தினையும் ஊர்ந்து உகரம் வந்தால் அது குற்றிய லுகரம் என்று வழங்கப்படும் எனக் கொள்க. என்னை? |
| 'நெடிலே குறிலிணை குறினெடி லென்றிவை ஒற்றொடு வருதலொடு குற்றொற் றிறுதியென் (12) றேழ்குற் றுகரக் கிடனென மொழிப' (13) எழுவகை யிடத்துங் குற்றிய லுகரம் வழுவின்றி வரூஉம் வல்லா றூர்ந்தே' |
என்றார் ஆகலின். |
வரலாறு |
நாகு, காசு, காடு, காது, காபு, காறு என நெடிற்கீழ் ஆறு வல்லெழுத்தினையும் ஊர்ந்து குற்றியலுகரம் வந்தவாறு. |
|
(12) எழுவகை என்பதைப் பலர் மறுப்பர்: 'இதனை ஏழென்று கொள்வார்க்குப் பிண்ணாக்கு, சுண்ணாம்பு, ஆமணக்கு முதலியன முடியாமை உணர்க' (தொல். எழுத். சூ. 406, 320.) சிவஞான முனிவரும் இங்ஙனமே கூறுவர்; நன். சூ. 94. |
|
(13) இது பல்காயனார் வாக்கு என்பார்; யா. வி. சூ. 2, உரை. |